குளிக்கும்போது தப்பித்தவறி கூட இந்த தவற்றை செய்து விடாதீங்க!
உடலின் அழகுக்கு மிக முக்கியமானது உடலின் அனைத்து பாகங்களின் தூய்மையும், இதற்காக தினமும் சரியான வழியில் குளிப்பது மிகவும் முக்கியம்.
பெரும்பாலும் மக்கள் குளிக்கும்போது தங்கள் உறுப்புகளை சுத்தம் செய்வது தொடர்பான சில தவறுகளை செய்கிறார்கள், இதன் காரணமாக பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் அவற்றில் செழிக்கத் தொடங்குகின்றன.
தினமும் தலைக்கு குளிப்பது நல்லதா?
தினமும் உங்கள் கூந்தலை அலசாமல் இருப்பது ஆரோக்கியம் இல்லாதது என நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மை என்ன வெனில் தினமும் தலைக்கு குளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படி தினமும் தலைக்கு குளித்தால் இது இயற்கையாக தலையில் இருக்கும் எண்ணெய் பசையை அகற்றிவிடும். இதனால், முடி உதிர்வை உண்டாக்கக்கூடும்.
குளிக்கும் முறை :
- நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.
- அதனால் தான் நம் முன்னோர்கள், குளத்தில் இறங்கும் போது ஒவ்வொரு படியாக இறங்குவார்கள். நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.
- இதேபோன்று உச்சதலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது என்பதற்காக சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.
- இதேபோன்று குளித்து விட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.
குளிக்கும்போது தப்பித்தவறி கூட இந்த தவற்றையெல்லாம் செய்யாதீங்க -
- குளிப்பதற்கு முன்போ அல்லது குளிக்கும் போதோ ஷேவிங் / வேக்ஸிங் செய்வது சருமத்திற்கு பாதிப்புகளை அளிக்கும். குளித்த பிறகு இதைச் செய்வது சிறப்பு.
- கெமிக்கலைக் கொண்ட சோப்பினால் உடலை அதிகம் தேய்த்துக் குளிப்பது சருமத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
- குளித்த பிறகு பயன்படுத்திய டவல்லை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.அதை உடலிலேயே அல்லது தலையில் கட்டிக் கொண்டு இருப்பதால் முடி உதிர்வு மற்றும் சரும வறட்சி ஏற்படும்.
- அந்தரங்க பகுதிகளில் சோப்பைப் பயன்படுத்துவது கெடுதலை ஏற்படுத்தும்.
- குளித்த உடனே டியோடரண்ட் மற்றும் பவுடர்யை பயன்படுத்தினால் சருமத்தில் எரிச்சல் மற்றும் வறட்சி அதிகமாகும்.
- உடற்பயிற்சி செய்த உடனேயே குளிப்பது உடலில் பாதிப்புகளை அதிகரிக்கும்.
- ஷாம்பூ பயன்படுத்திய பிறகு கண்டிஷனர் பயன்படுத்துவது சிறப்பு. இது முடி உதிர்வதைத் தவிர்த்து கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.