இனி சிரமமில்லை...பிங்க் ஆக மாறும் பெண்கள் இலவச பேருந்து!

M K Stalin Tamil nadu DMK
By Sumathi Jul 12, 2022 06:44 AM GMT
Report

பெண்கள், இலவசமாக பயணம் செய்யக்கூடிய பேருந்துகளை பிங்க் நிற வண்ணத்தில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலவச பேருந்து

இதற்கான முன்மாதிரியாக தற்போது 3 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. எளிதில் அடையாளம் காணக்கூடிய வகையில் இந்த பேருந்துகள் இருப்பதால், பெண்களிடையே இதற்கு வரவேற்பும் இருக்கிறது.

cm stalin

தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின்படி நகர பேருந்துகளில் பெண்கள் இலவச பயண திட்டத்திற்கான கோப்புகளில் முதல் கையெழுத்திட்டார்.

 மு.க.ஸ்டாலின்

இந்த திட்டத்தை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் உடனடியாக செயல்படுத்தினர். இத்திட்டம் பெண்கள் மத்தியில் அமோகவரவேற்பை பெற்றது. மாநகர பேருந்துகளில் விரைவு பேருந்துகள் அல்லாத பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

govt bus

இதனால் பயன் பெறும், பெண் பயணியரின் எண்ணிக்கையும், 62 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதன் காரணமாக, மாநிலம் முழுதும் உள்ள 7,300 அரசு நகர பேருந்துகளும் முழுமையாக இயக்கப்பட்டு வருகின்றன.

பிங்க் நிறம்

ஆனால் தமிழ்நாட்டில் மாநகர அரசு பேருந்து அனைத்தும் ஒரே கலரில் இயங்குவதால் பெணகளுக்கு இலவச கட்டண பேருந்துகளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டு வந்தது.

இதனால் சில பேருந்துகளில் நடத்துனர், பெண்களுக்கு இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது. இந்நிலையில், இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுள்ள நகர பேருந்துகளை, பெண்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில், பிங்க் நிறம் பூச முடிவு செய்யப்பட்டுள்ளது.

கட்டணமில்லா  பேருந்து

இதன் முன்னோட்டமாக, சென்னை குரோம்பேட்டை மாநகர போக்குவரத்து கழகத்தில், 3 பேருந்துகளுக்கு பிங்க் நிறம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் கூறுகையில், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் எளிதில் அடையாளம் காணும் வகையில், கட்டணமில்லா பயணச் சலுகை பேருந்துகளுக்கு, தனி நிறம் பூச முடிவு செய்தோம்.

அதன்படி, பிங்க் நிறம், பேருந்தின் முன் மற்றும் பின் பகுதியில் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாதிரிக்காக, 3 பேருந்துகளில் இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

அரசின் ஒப்புதல் கிடைத்த பின், படிப்படியாக மற்ற அனைத்து சாதாரண கட்டண பேருந்துகளிலும் பிங்க் நிறம் பூசப்படும் என்று கூறினர்.

தம்பியின் சடலத்துடன் காத்திருந்த 8வயது சிறுவன்... நெஞ்சை உலுக்கும் சம்பவம்!