தம்பியின் சடலத்துடன் காத்திருந்த 8வயது சிறுவன்... நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

Viral Video India Madhya Pradesh
By Sumathi Jul 12, 2022 04:56 AM GMT
Report

எட்டு வயது சிறுவன் உயிரிழந்த தனது 2 வயது சகோதரரின் உடலை மடியில் வைத்து ஆம்புலன்ஸ்காக காத்திருந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 குழந்தை உயிரிழப்பு

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து 450 கிமீ தூரத்தில் உள்ளது மொரோனா மாவட்டம். இங்குள்ள மாவட்ட மருத்துவமனையில் அம்பா என்ற பகுதியைச் சேர்ந்த பூஜாராம் என்பவர் தனது 2 வயது மகனை சிகிச்சைக்காக கொண்டுவந்துள்ளார்.

2 வயது சிறுவனுக்கு ஈரல் தொடர்பாக நோய் இருந்துள்ளது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த அந்த சிறுவனை தனது வீட்டிற்கு அழைத்து செல்ல அம்புலன்ஸை ஏற்படு செய்ய முயற்சித்துள்ளார்.

ஆம்புலன்ஸ் சேவை

இவரின் கிராமம் மருத்துவமனையில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ளது. ஆனால், மருத்துவமனை தரப்பு பூஜாராமிடம் இலவச ஆம்புலன்ஸ் சேவை தற்போதைக்கு இல்லை என கைவிரித்துள்ளது.

தனியார் ஆம்புலன்ஸ்சை ஏற்பாடு செய்யும் அளவிற்கு பூஜா ராமிற்கு வசதி இல்லாததால், தனது மற்றொரு மகனான குல்ஷானிடம் இரண்டு வயது மகனின் உடலை ஒப்படைத்து விட்டு மாற்று ஏற்பாடுக்காக அருகே சென்றுள்ளார்.

அதிர்ச்சி சம்பவம்

தனது இரண்டு வயது தம்பியின் உடலை மடியில் வைத்துக்கொண்டே 8 வயது சிறுவன் குல்ஷான் தந்தையின் வருகையை எதிர்பார்த்து அரை மணிநேரத்திற்கும் மேலாக பொதுவெளியில் அமர்ந்துள்ளார்.

இந்த காட்சி காண்போரின் நெஞ்சை உலுக்கியுள்ளது.இந்நிலையில், இதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி யோகந்திரா சிங் உடலை பூஜாராம்மின் சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்சை ஏற்பாடு செய்து உதவியுள்ளார்.

தாயுடன் லிவ்-வின் ரிலேஷன்சிப்...மகளை கர்ப்பமாகிய இளைஞர்!