விபத்தில் உயிரிழந்த நண்பன் - ஆம்புலன்ஸ் மீது ஏறி குத்தாட்டம் போட்ட கும்பல் - வீடியோ வைரல்

The stabbing mob
By Nandhini Dec 16, 2021 03:23 AM GMT
Report

மதுரையில் விபத்தில் உயிரிழந்த நண்பணின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் மீது ஏறி நின்று கொண்டு, போதையில் குத்தாட்டம் போட்டும், நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களை மறித்து இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்யும், இளைஞர்கள் அட்டகாசம் செய்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரை தனக்கன்குளத்தைச் சேர்ந்தவர் அம்மாவாசி. இவருடைய மனைவி செல்வி. இவர்களுடைய மகன் அபிகண்ணன் (21). இவர் தனியார் சட்டக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் கல்லூரி முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் வழியில் தனக்கன்குளம் பகுதியிலேயே நேற்று இரவு விபத்து ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அபிகண்ணன் நேற்று யிரிழந்தார்.

இதனையடுத்து, வழக்கு பதிவு செய்த திருமங்கலம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்த பின் இறந்த அபி கண்ணனின் உடலை அவரது பெற்றோருடன் ஒப்படைத்தனர். அவரது உடலை திருமங்கலம் அரசு மருத்துவமனையிலிருந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் பகுதிக்கு அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது.

அப்போது இறந்த நபரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலர் திருமங்கலம் அரசு மருத்துவமனையிலிருந்து கப்பலூர் சுங்கச்சாவடி மற்றும் தேசிய நெடுஞ்சாலை வழியாக தனக்கன்குளம் செல்லும் வரை ஆரவாரமாக சென்றதுடன் மட்டுமின்றி இறந்த நபர் உடல் வைக்கப்பட்ட தனியார் ஆம்புலன்ஸ் மீது ஏறி நின்று சாலை முழுவதும் அலப்பறை செய்து வந்தனர்.

சாலையில் இருந்த தடுப்புகளை சேதப்படுத்தியதுடன், சாலையில் மற்ற வாகனங்களை செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினார் அலப்பறையில் ஈடுபட்டனர். இதனால் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மது போதையில் நண்பனின் இறுதி ஊர்வலத்தில் அவரது உடல் வைத்திருக்கும் ஆம்புலன்ஸ் மீது ஏரி ஆட்டம் போட்ட இளைஞர்களின் இத்தகைய சாகசங்கள் பார்ப்போரை வேதனை அடையச் செய்துள்ளது. 

விபத்தில் உயிரிழந்த நண்பன் - ஆம்புலன்ஸ் மீது ஏறி குத்தாட்டம் போட்ட கும்பல் - வீடியோ வைரல் | Samugam The Stabbing Mob