தாயுடன் லிவ்-வின் ரிலேஷன்சிப்...மகளை கர்ப்பமாகிய இளைஞர்!
லிவ் இன் ரிலேஷன்சிப்பில் இருந்த நபர் பெண்ணின் மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாயுடன் லிவ்-வின்
மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உள்ள மிஸ்ரோட் என்ற பகுதியில் ஆண் மற்றும் ஏற்கனவே திருமணமான பெண் ஆகியோர் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்துள்ளனர்.

இவர்களுடன் அப்பெண்ணின் இரண்டு மகள்களும் வசித்துவந்தனர். பீகாரைச் சேர்ந்த இப்பெண்ணின் கணவர் இறந்துவிட்டதால் வேலை நிமித்தமாக அவர் மத்திய பிரதேசத்திற்கு குடிபெயர்ந்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை
தினக்கூலி வேலை பார்த்துவந்த அந்த பெண்மணி, அருகில் வசித்துவந்த நபர் ஒருவருடன் லிவ் இன் உறவில் இருந்து வந்துள்ளார். இளைஞருக்கு, அப்பெண்ணின் மூத்த மகள் மீது ஆசை இருந்துள்ளது.

அந்த இளைஞர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்வதற்கான தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் அப்பெண் தனது இளைய மகளை அழைத்துக்கொண்டு உறவினர் வீட்டுக்குச் சென்றுவிடவே
சிறுமி கர்ப்பம்
அந்த இளைஞர் வீட்டில் இருந்த மூத்தமகளை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியுள்ளார். பாலியல் வன்கொடுமையை எதிர்த்து அப்பெண் போராடியபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
சமீபத்தில் திடீரென அப்பெண்ண்ணிற்கு வயிற்றுவலி வரவே, அதுபற்றி தன் தாயிடம் கூறியுள்ளார். மகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை விரைந்த தாயை, ஸ்கேன் செய்து பார்க்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
வழக்குப் பதிவு
ஸ்கேன் செய்து பார்த்ததில் ஐந்த சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. சிறுமி கர்ப்பமானது குறித்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் இதுகுறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனநல ஆலோசனை வழங்கபட்டபோது தன் மனக்குமுறல் அனைத்தையும் அந்த சிறுமி கொட்டியுள்ளார்.
இதனையடுத்து அந்த இளைஞர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவன் - இவன் பட பிரபல நடிகர் மறைவு - அதிர்ச்சியில் திரையுலகம்!
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு விரையும் தூதுவர் IBC Tamil