அவன் - இவன் பட பிரபல நடிகர் மறைவு - அதிர்ச்சியில் திரையுலகம்!

Only Kollywood Tamil nadu
By Sumathi Jul 12, 2022 02:56 AM GMT
Report

அவன் இவன் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த ராமராஜ் காலமானார்.

 ராமராஜ்

அவன் இவன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ராமராஜன்.

அவன் - இவன் பட பிரபல நடிகர் மறைவு - அதிர்ச்சியில் திரையுலகம்! | Avan Ivan Comedian Ramaraj Passes Away

கடந்த ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்.

 உறவினர்கள் அஞ்சலி

அவருக்கு வயது 72. அவரது உடல், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள அவரது சொந்த இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அங்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின் இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமராஜன் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேல சாக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்.

இரங்கல்

கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பின் சினிமாவுக்கு வந்தவர். அவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.

அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உக்ரைன் மக்களுக்கான ரஷ்ய குடியுரிமை ஆணையில் கையெழுத்திட்ட அதிபர் புதின்..வெற்றியை எட்டிய ரஷ்யா?