உக்ரைன் மக்களுக்கான ரஷ்ய குடியுரிமை ஆணையில் கையெழுத்திட்ட அதிபர் புதின்..வெற்றியை எட்டிய ரஷ்யா?

Vladimir Putin Russo-Ukrainian War Ukraine Russian Federation
By Sumathi Jul 12, 2022 02:41 AM GMT
Report

உக்ரைனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக ரஷியா கிட்டத்தட்ட 150 நாட்களாக அந்த நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது.

ரஷிய குடியுரிமை

இந்த சூழலில் உக்ரைனியர்கள் அனைவருக்கும் ரஷிய குடியுரிமை வழங்குவதற்கான விரைவான பாதையை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஆணையில் ரஷிய அதிபர் புதின் நேற்று கையெழுத்திட்டார்.

russia

கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களில் உள்ள உக்ரைனியர்கள் எளிதில்

 உக்ரைன்

ரஷிய குடியுரிமையை பெறுவதற்கான விரைவு குடியுரிமை திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு ரஷிய அரசு அறிமுகப்படுத்தியது.

ukraine

அதன் தொடர்ச்சியாக உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய 3 மாதங்களுக்கு பிறகு கடந்த மே மாதம் மேற்கு உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா மற்றும் கெர்சன் பிராந்தியங்களை சேர்ந்த மக்களும்

அதிபர் புதின் 

ரஷிய குடியுரிமையை எளிதில் பெறும் வகையில் அந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இந்த நிலையில்தான் உக்ரைனில் உள்ள அனைத்து மக்களும் ரஷிய குடியுரிமையை பெறுவதற்கு விரைவு

குடியுரிமை திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஆணையில் அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார்.  

பாலியல் வன்கொடுமை..இளைஞரை நிர்வாணப்படுத்தி கட்டி வைத்து எரித்த ஊர்மக்கள்!