69 வயதில் தந்தையாகும் ரஷிய அதிபர் புதின் ?

Vladimir Putin
By Irumporai May 16, 2022 10:11 AM GMT
Report

ரஷ்ய அதிபர் புதினின் 38 வயது ரகசிய காதலி அலினா கபேவா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நடவடிக்கை பிப்ரவரி மாத இறுதியில் துவங்கியது. போரானது 90 நாட்களை நெருங்கி கொண்டிருக்கிறது. இந்த பரபரப்புக்கு இடையில் புதினின் ரகசிய காதலியான அலினா கபேவா (38) கர்ப்பமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதின் -அலினா கபேவா ஆகியோருக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளதாக (வெளிப்படையாக அறிவிக்கவில்லை) கூறப்படும் நிலையில் தான் அலினா கபேவா கர்ப்பமாகி உள்ள செய்திகள் பரவுகின்றன.

69 வயதில் தந்தையாகும் ரஷிய அதிபர் புதின் ? | Putin Father Again Rumoured Girlfriend Believed

இதுபற்றி ரஷியாவின் செய்தி நிறுவனம் ஒன்றும் செய்தி வெளியிட்டுள்ளது. இதை பார்த்த 69 வயதான புதின் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தி கார்டியன் போன்ற பல செய்தி நிறுவனக்கள் அலினா புதினின் காதலி என்று கூறியுள்ளன.

இருப்பினும், அதிபர் விளாடிமிர் புதின் இதை ஒருபோதும் பகிரங்கமாக ஒப்புக் கொள்ளவில்லை. பொது இடங்களில் அலினா அரிதாகவே காணப்படுகிறார். விளாடிமிர் புதின் தனது மனைவி லியுத்மிலாவை 2014ல் விவாகரத்து செய்தார்.

இந்த விவாகரத்துக்கும் அலினா கபேவா தான் காரணம் என கூறப்பட்டது. சர்ச்சைகளுக்கு பெயர் போன அலினாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 77 ஆயிரம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.