லிவ்-இன் ரிலேஷன்சிப்பில் இருந்தாலும் இதற்கும் உரிமை உண்டு – பஞ்சாப் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!

samugam-viral-news
By Nandhini Sep 09, 2021 06:10 AM GMT
Report

திருமணமான ஒரு ஆண் லிவ் இன் டூகெதர் உறவில் இருந்தாலும் அவருக்கு பாதுகாப்பு பெறும் உரிமை உண்டு என பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருமணமற்ற உறவான லிவ் இன் ரிலேஷன்சிப்பில் இருக்கும் தம்பதி தங்களுக்கு சட்ட ரீதியான காவல் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவின் மீது இந்தத் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. அந்த ஆண் ஏற்கெனவே திருமணமானவர். 12 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனையடுத்து, அவரது விவாரகத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அந்த வழக்கு இன்னமும் முடியாமல் நிலுவையில் இருக்கிறது. இதனால் தனக்கு ஒரு துணை தேடிக்கொண்டு அவரை திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் டூகெதரில் இருந்து வருகிறார். இனிமேலும் அவரது மனைவியோடு வாழ அவர் விரும்பவில்லை என விவாகரத்து வழக்கில் திட்டவட்டமாகக் கூறி இருக்கிறார். ஆனால் அவரது மனைவி அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை.

இதனால் கணவருக்கும் அவரது காதலிக்கும் மனைவியும் அவரது குடும்பத்தாரும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். மேலும், மனைவி கொடுத்த புகாரின் பேரில் சாம்ராலா காவல் நிலையத்தில் இருப்பவர்களும் எங்களை தொந்தரவு செய்து வருகிறார்கள்.

இவர்கள் அனைவரிடமிருந்தும் பாதுகாப்பு வழங்கி தாங்கள் சுதந்திரமாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தை நாடினார்கள். இந்த மனு நீதிபதி அமோல் ரத்தன் சிங் தலைமையிலான அமர்வு முன்பு வந்தது. இறுதி விசாரணை முடிந்து நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

அந்த தீர்ப்பில், மனுதாரர்கள் (லிவ் இன் தம்பதி) எந்தக் குற்றமும் புரிந்ததற்கான முகாந்திரம் கிடையது. அவர்கள் இருவரும் வயது வந்தவர்கள். ஆகவே அவர்கள் இருவரும் நேரடி உறவில் இருப்பதில் எந்தத் தவறும் கிடையாது. விவாகரத்து வழக்கு நிலுவையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இதில் தவறு ஏதும் கிடையாது. ஆகவே, மாவட்ட காவல் துறை எஸ்எஸ்பி கன்னா மனைவி குடும்பத்தார் மற்றும் சாம்ரல்லா காவல் அதிகாரிகளிடமிருந்தும் காப்பாற்றி மனுதாரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். உத்தரவை மீறி காவல் துறை மீண்டும் மனுதாரர்களைத் துன்புறுத்தினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினார். 

லிவ்-இன் ரிலேஷன்சிப்பில் இருந்தாலும் இதற்கும் உரிமை உண்டு – பஞ்சாப் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு! | Samugam Viral News