மனைவியை விருந்தாக்கும் பார்ட்டி...கேரளாவை தொடர்ந்து இங்கயும்?
உத்தரபிரதேச மாநிலம் குர்காம் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தனது மனைவியே மற்றவர்களுக்கு விருந்தாகக் கொடுத்துள்ளார்.
விருந்து
டெல்லியில் அடிக்கடி நடக்கும் மனைவிகளை மாற்றி அனுபவிக்கும் விருந்துக்குத் தொழில் அதிபர் தனது 30 வயதுடைய மனைவியை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்வாராம்.

இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனாலும் மனைவியை மிரட்டி இது போன்ற விருந்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அதிர்ச்சி சம்பவம்
சம்பவத்தன்று அவர் தனது தம்பியுடன் இருக்குமாறு மனைவியை வற்புறுத்தினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இதற்கு உடன்பட மறுத்தார்.

இதனால் அந்த தொழில் அதிபர் மனைவியை சித்ரவதை செய்தார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். எனது கணவர் என்னைக் கட்டாயப்படுத்தி விருந்துக்கு அழைத்துச் சென்றார்.
மிரட்டல்
இதனால் நான் உடல்ரீதியாகச் சித்ரவதை செய்யப்பட்டேன். என அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் நான் வேறு ஆண்களுடன் இருக்கும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.
கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக உத்தரபிரதேச நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் தொழில் அதிபர் மற்றும் அவரது தம்பி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் இதுபோன்ற விருந்து கேரளா மாநிலத்தில் நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்து இணையத்தளத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்காதலியுடன் பயணம்... மனைவியிடம் மறைக்க பாஸ்போர்ட் பக்கங்களை கிழித்த கணவர்!
இலங்கையில் முதன் முறையாக பயன்படுத்தப்பட்ட அதிக சக்திவாய்ந்த வெடிபொருள்! ஈஸ்டர் வழக்கில் ஜமைக்காவில் இருந்து வழங்கப்பட்ட சாட்சியம் IBC Tamil
தடுப்புக் காவலில் உள்ள ஈஸ்டர் வழக்குடன் தொடர்புடையவர்கள்! 7-ஆவது குற்றவாளி நீதிமன்றில் பகிரங்கம் IBC Tamil