பரபரப்புக்கு மத்தியில் டெல்லி புறப்பட்டு சென்றார் ஓ.பன்னீர்செல்வம்..!
பரபரப்பான சூழலுக்கு மத்தியில் டெல்லி புறப்பட்டு சென்றார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.
பரபரப்புக்கு மத்தியல் பொதுக்குழு
இன்று காலை அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கூடியது. இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்பட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் 23 தீர்மானங்களை ரத்து செய்வதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
மேலும் இரட்டை தலைமையால் கட்சி பின்னடைவை சந்திப்பதாகவும்,தொண்டர்கள் ஒற்றை தலைமையை விரும்புவதாகவும் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து அடுத்த பொதுக்குழுவில் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பேசிய தமிழ்மகன் உசேன் அடுத்த பொதுக்குழு கூட்டம் வருகிற 11 தேதி நடைபெறும் என அறிவித்தார்.
பின்னர் மேடையில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைத்தியலிங்கம் மேடையில் இருந்து பாதியிலேயே வெளியேறினர். அப்போது அவர் மீது தண்ணீர் பாட்டிகள் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜக நிர்வாகிகள் சந்திப்பு
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பின் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் வீடுகளுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் சென்றனர்.
இந்த சந்திப்பின்போது, ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ள திரவுபதி முர்மு நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதால் அதற்கு அதிமுக ஆதரவு அளிக்க வேண்டுமென ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்-இடம் பாஜக தலைவர்கள் அண்ணாமலை , சிடி ரவி வேண்டுகோள் விடுத்தனர்.
ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் திரவுபதி நாளை வேட்புமனு தாக்கல் செய்யும் சமயத்தில் கூட்டணி கட்சியினர் அங்கு இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும் ஆகையால் அதிமுக தலைவர்கள் டெல்லிக்கு வரவேண்டுமென அண்ணாமலை மற்றும் சிடி ரவி கோரிக்கை விடுத்தனர்.
டெல்லி சென்றார் ஓ.பி.எஸ்
இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வம் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். விமான நிலையம் செல்லும் வழியில் டெல்லிக்கு செல்வது ஏன்? ஒற்றைத்தலைமை குறித்து விவாதிக்கவா? என ஓ.பன்னீர் செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது பேசிய ஓ.பன்னீர் செல்வம், இந்திய ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு நாளை பாஜகவில் இருந்து நடைபெறுகிறது.
வேட்பு மனு தாக்கலில் போது வருகை புரியுமாறு பாஜக தலைமை அழைப்பு விடுத்துள்ளார்கள். அதில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்கிறேன் என்றார்.
துரோகி எடப்பாடியார்..அச்சோ மறந்துட்டேன்..துரோகி ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் தொண்டர் கோஷம்..!