கலவரமான அதிமுக பொதுக்குழு கூட்டம் ? தாக்கப்பட்டாரா ஓ.பி.எ.ஸ்?
சென்னை வானகரத்தில் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி எதிரும் புதிருமாக மேடையில் அமர்ந்திருந்தனர்.
கொந்தளித்த சண்முகம்
அப்போது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிக்கிறது என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசத்துடன் தெரிவித்தார். பொதுக்குழு தீர்மானங்களை பொன்னையன் முன்மொழிவார் என்று மேடையில் அறிவித்தார்.
முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் குறுக்கிட்டு அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை நிராகரிப்பதாக முழக்கமிட்டு ஆவேசத்துடன் அறிவித்தார். இந்த நிலையில் பொதுக்குழ்வில் பங்கேற்க வந்த ஒபிஎஸ் பொதுக்குழுவை விட்டு வெளியேறினார்.
ஒபிஎஸ் மீது தாக்குதல்
இந்நிலையில் சட்டத்திற்கு புறம்பாக பொதுக்குழு தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பு தெரிவித்தவைத்திலிங்கம் வெளியேற, அவரை தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் மேடையிலிருந்து வெளியேறினார்.
அதிமுக பொதுக் குழுவில் இருந்து வெளியேறிய ஓ.பன்னீர்செல்வத்தின் மீது காகிதங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. அத்துடன் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு வந்த ஓ. பன்னீர்செல்வத்தின் வாகனம் பஞ்சர் செய்யப்பட்டது.
பொதுக்குழுவுக்கு வந்த ஓபிஎஸ் மீது, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் தர்மசங்கடமான சூழலுடன் அவர் அங்கிருந்து வெளியேறினார்.
இந்த நிலையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதுடன், வருகிற ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.
பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் : நடப்பது என்ன? - நேரலையில்