ஜூலை 11ல் மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் - அவைத்தலைவர்

Edappadi K. Palaniswami O. Panneerselvam
5 நாட்கள் முன்

ஒற்றைத் தலைமை

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தியது. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்று ஈபிஎஸ் தரப்பு தெரிவித்தது. இதனால், அதிமுகவில் உச்ச கட்ட பரபரப்பு நிலவியது.

பொதுக்குழுவுக்கு வந்த ஓபிஎஸ் - இபிஎஸ்

இன்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சென்னை வானகரம் மண்டபத்தை வந்தடைந்தார் ஓ.பன்னீர்செல்வம். கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்து முதல் ஆளாக பொதுக்குழு கூட்டத்திற்கு வந்தடைந்தார். இதனையடுத்து, எடப்பாடி பழனிச்சாமியும் பொதுக்குழு கூட்டத்திற்கு வந்தடைந்துள்ளார். சி.வி.சண்முகம் பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. அப்போது, அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மேடையில் ஆவேசமாக பேசினார்.

ஓபிஎஸ் ஒழிக, துரோகி ஓபிஎஸ் கோஷம்

பொதுக்குழு அரங்கிற்கு ஓ.பி.எஸ். வந்த வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. அவருக்கு எதிராக தொடர்ந்து கோஷமும், முழக்கமும் எழுப்பப்பட்டது. அப்போது, எடப்பாடி பழனிச்சாமி ஆதாரவாளர்களால் ஓ.பி.எஸ். ஒழிக, துரோகி ஒழிக என்று கூச்சலிட்டு கோஷம் எழுப்பினர். அந்த நேரத்தில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஓ.பி.எஸ். வெளிநடப்பு

இன்று அதிமுக பொதுக்குழு கூட்டத்திலிருந்து ஓ.பி.எஸ். வெளிநடப்பு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஓ.பி.எஸ். வெளிநடப்பு செய்த போது அவர் மீது தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவற்றை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் ஏற்பட்டது. 

பொதுக்குழு கூட்டம்

அதிமுக பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் ஜூலை 11ல் மீண்டும் நடைபெறும் என்று அவைத்தலைவர் அறிவித்துள்ளார். 

ஜூலை 11ல் மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் - அவைத்தலைவர் | O Panneerselvam Admk Tamilnadu Edappati

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.