23 வரைவு தீர்மானங்களுக்கு ஓபிஎஸ் ஒப்புதல் - நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை? - வெளியான தகவல்

Tamil nadu Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Nandhini Jun 23, 2022 05:47 AM GMT
Report

ஒற்றைத் தலைமை

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தியது. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்று ஈபிஎஸ் தரப்பு தெரிவித்தது. இதனால், அதிமுகவில் உச்ச கட்ட பரபரப்பு நிலவியது.

23 வரைவு தீர்மானங்களுக்கு ஓபிஎஸ் ஒப்புதல்

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவுள்ள 23 வரைவு தீர்மானங்களுக்கு ஓபிஎஸ் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், 23 தீர்மானங்கள் தவிர வேறு எந்த தீர்மானத்தையும் அனுமதிக்க முடியாது என்றும் கட்சி விதிகளுக்கு முரணாக ஓபிஎஸ் செயல்பட மாட்டார் என்று அவர் தரப்பிலிருந்து உறுதியளிக்கப்பட்டது.

பொதுக்குழுவுக்கு முதலில் வந்த ஓபிஎஸ்

இன்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சென்னை வானகரம் மண்டபத்தை வந்தடைந்தார் ஓ.பன்னீர்செல்வம். கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்து முதல் ஆளாக பொதுக்குழு கூட்டத்திற்கு வந்தடைந்தார்.

23 வரைவு தீர்மானங்களுக்கு ஓபிஎஸ் ஒப்புதல் - நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை? - வெளியான தகவல் | O Panneerselvam Admk Tamilnadu Edappati

23 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை?

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவுள்ள 23 வரைவு தீர்மானங்களுக்கு ஓபிஎஸ் ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால், அந்த 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.