துரோகி எடப்பாடியார்..அச்சோ மறந்துட்டேன்..துரோகி ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் தொண்டர் கோஷம்..!
பெரும் கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
ஒற்றை தலைமை விவகாரம்
ஒற்றை தலைமை விவகாரம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஒருபக்கம் ஓ.பி.எஸ் தரப்பினரும் மறுபக்கம் ஈ.பி.எஸ் தரப்பினரும் மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஓ.பி.எஸ் தரப்பு நீதிமன்றத்தில் பொதுக்குழுவுக்கு தடை கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில் பொதுக்குழு நடத்த அனுமதி அளித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இதையடுத்து இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே இந்த வழக்கை அவசர வழக்காக நள்ளிரவில் விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு பொதுக்குழு நடத்த அனுமதி அளித்தது.பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர மற்ற தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என உத்தரவிட்டனர்.
பொதுக்குழுவில் ஓ.பி.எஸ்
இதையடுத்து இன்று காலை பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கூடியது.
இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்பட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் 23 தீர்மானங்களை ரத்து செய்வதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். மேலும் இரட்டை தலைமையால் கட்சி பின்னடைவை சந்திப்பதாகவும்,தொண்டர்கள் ஒற்றை தலைமையை விரும்புவதாகவும் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து அடுத்த பொதுக்குழுவில் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பேசிய தமிழ்மகன் உசேன் அடுத்த பொதுக்குழு கூட்டம் வருகிற 11 தேதி நடைபெறும் என அறிவித்தார்.
தண்ணீர் பாட்டில் வீச்சு
பின்னர் மேடையில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைத்தியலிங்கம் மேடையில் இருந்து பாதியிலேயே வெளியேறினர். அப்போது அவர் மீது தண்ணீர் பாட்டிகள் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் பிரச்சார வாகனத்தில் பொதுக்குழுவிற்கு வந்தார்.அப்போது அவரின் வாகனம் நிறுத்தப்பட்ட இடத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு வேன் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோஷம்
அப்போது ஈபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் திடீரென துரோகி எடப்பாடியார் என்று கோஷமிட்டார் அப்போது உடனிருந்தவர்கள் கூச்சலிடவே சுதாரித்துக் கொண்ட தொண்டர் துரோகி ஓ.பி.எஸ் என்று கோஷம் எழுப்பினார். தற்போது அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
An ADMK cadre, who is the supporter of EPS, has raised the slogan against EPS at the ADMK's General Council meeting. He immediately realized and changed the tone against OPS. #ADMK #EdappadiPalaniswami #OPanneerselvam #TamilNadu @thenewstuffin pic.twitter.com/e9zqY9JG8T
— Alagu muthu eswaran (@AMeswaran) June 23, 2022