நயன்தாரா,விக்னேஷ் திருமணம் கோலாகலம்..ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களில் 1 லட்சம் பேருக்கு விருந்து
நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நடைபெற்றது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் என்கிற நட்சத்திர விடுதியில் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
நயன்தாரா - விக்னேஷ் திருமணம்
7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் இன்று தங்களது கணவன், மனைவி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார்கள்.
இந்து முறைப்படி இவர்களது திருமணம் நடந்தது. இன்று காலை 8:30 மணியளவில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலியை கட்டினார்.
பிரபலங்கள் பங்கேற்பு
இந்த திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் அனிருத், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் பங்கேற்றனர்.
மேலும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உள்ளனர்.
திருமணத்தில் செல்போன்களுக்கு அனுமதியில்லை என பல்வேறு பலத்த கட்டுப்பாடுகளுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
#SRK with his #Jawan director @Atlee_dir at #WikkiNayanWedding #WikkiNayan pic.twitter.com/KADuAOu253
— Rajasekar (@sekartweets) June 9, 2022
திருமண விருந்து
இந்நிலையில், விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தையொட்டி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் 1 லட்சம் பேருக்கு இன்று மதியம்
திருமண விருந்து வழங்கப்பட உள்ளது.
ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய கோவில்களில் இந்த திருமண விருந்தை வழங்க நட்சத்திர தம்பதிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
Celebrities, including actors @Karthi_Offl, @realsarathkumar, @DhivyaDharshini, @iamvasanthravi arrive to wish the couple, who just got married.#NayantharaVigneshShivan #Nayantharawedding #WikkiNayan #VigneshShivanWedsNayanthara #VigneshShivan #Nayanthara pic.twitter.com/LHfPLPpnja
— DT Next (@dt_next) June 9, 2022