கள்ளக்காதலியுடன் பயணம்... மனைவியிடம் மறைக்க பாஸ்போர்ட் பக்கங்களை கிழித்த கணவர்!
பாஸ்போர்ட் பக்கங்களை கிழிப்பது குற்றம் என்ற நிலையில் அந்த நபரை காவல்துறை மோசடி மற்றும் ஏமாற்று வழக்குகளில் கைது செய்துள்ளது.
பாஸ்போர்ட்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த பயணி ஒருவரை அதிகாரிகள் வழக்கம் போல சோதனை செய்துள்ளனர்.
அப்போது அந்த நபரின் பாஸ்போர்ட்டில் சில பக்கங்கள் காணமால் போனதை அவர்கள் கண்டறிந்தனர். கடைசியாக பயணம் சென்று வந்த பக்கங்கள் என்பதை அறிந்த அவர்கள் அந்த நபரை பிடித்து விசாரித்துள்ளனர்.
காணமால் போன பக்கங்கள்
அப்போது தான் அந்த நபர் வேண்டுமென்றே பாஸ்போர்ட்டின் பக்கங்களை கிழித்திருப்பதை அதிகாரிகள் தெரிந்து கொண்டனர். குற்றத்திற்கு ஆளான அந்த நபருக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது.
அதனால், கள்ளக்காதலியுடன் அவர் மாலத்தீவு சென்று வந்துள்ளார். இந்த விஷயம் மனைவிக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காகவே உஷாராக இருக்க பாஸ்போர்டில் இந்த பயணத் தகவல்கள் இருந்த பக்கங்களை கிழித்து நீக்கியுள்ளார்.
காதலியுடன் டூர்
பாஸ்போர்ட் பக்கங்களை கிழிப்பது குற்றம் என்ற நிலையில் அந்த நபரை காவல்துறை மோசடி மற்றும் ஏமாற்று வழக்குகளில் கைது செய்துள்ளது. கைதான நபர் தனக்கு இந்தியாவின் வேறு இடத்திற்கு வேலை நிமித்தமாக செல்கிறேன் என மனைவியிடம் தெரிவித்துள்ளார்.
மனைவியிடம் பொய் சொல்லிவிட்டு இவர் மாலத்தீவு சென்ற நிலையில், செல்போன் மூலம் இவரை மனைவி தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்.
அப்போது இவர் அழைப்புகளை எடுக்காததால் மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, மனைவியிடம் மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தில் தான் பாஸ்போர்ட்டை கிழித்துள்ளார்.
உடலுறவு ஒருவரின் தனிப்பட்ட விஷயம்..யாரும் தலையிட முடியாது! - நடிகை பரபரப்பு பேட்டி