முன்னாள் மனைவிக்கு எதிராக டி.இமான் வழக்கு - ஏன் என்னாச்சு தெரியுமா?

Case ExWife Against டி.இமான் D.Imman
By Thahir Apr 05, 2022 08:52 AM GMT
Report


தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி.இமான்.தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களான விஜய்,அஜித்,சூர்யா உள்ளிட்டவர்களின் திரைப்படங்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்டு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு பெண்கள் உள்ள நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்தார்.

இந்நிலையில் டி.இமான் தனது மனைவி குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தன்னுடைய இரண்டு குழந்தைகளின் பாஸ்போர்ட் என்னிடம் இருக்கும் போது மோனிகா பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதாக கூறி மோனிகா புது பாஸ்போர்ட் ஒன்றை வாங்கியுள்ளார்.

இது சட்டவிரோதமானது எனவே தனது குழந்தைகளின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய போலி மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு மனு கொடுத்துள்ளார்.

அப்போது அதிகாரி உயர்நீதிமன்ற உத்தரவு இல்லாமல் அவ்வாறு ரத்து செய்ய முடியாது என கூறியுள்ளார். என புதிய பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த். இது தொடர்பாக தலைமை பாஸ்போர்ட் அதிகாரி,மண்டல பாஸ்போர்ட் அதிகாரி,மோனிகா ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார் மேலும் விசாரணையை ஜுன் 9-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.