முகப்பரு..முகத்தில் ஊசியால் குத்திய ஆசிரியை - உயிரிழந்த மாணவன்!

Tamil nadu Attempted Murder Child Abuse Tiruvannamalai
By Sumathi Jul 03, 2022 12:50 PM GMT
Report

பத்தாம் வகுப்பு மாணவன் முகத்தில் இருந்த முகப்பருவினை ஆசிரியை ஊசியால் குத்தி அகற்ற முயன்றதால் முகம் வீங்கி சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்துள்ளார்.

 அரசு பள்ளி

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியில் உள்ள அரசுவெளி கிராமத்தில் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றது. இதில் 300க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவ, மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.

tiruvannamalai

இந்நிலையில், ஜவ்வாது மலையில் உள்ள நம்மியம்பட்டு கிராமத்தினை சேர்ந்த சிவகாசி என்ற மாணவன் இந்த பள்ளியில் தங்கி 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

10 ஆம் வகுப்பு  மாணவன்

இந்நிலையில் கடந்த மாதம் 28 தேதி மாணவன் சிவகாசியின் முகம் வீங்கியுள்ளதாகவும், உடனடியாக சிகிச்சைக்கு அழைத்து செல்லக்கோரி இரவு 9 மணியளவில் மாணவனின் தந்தை செவத்தானுக்கு ஆசிரியர் மகாலஷ்மி தொலைப்பேசியில் தகவல் கொடுத்திருக்கிறார்.

தகவலின் பேரில் அங்கு வந்த அவரது தந்தை சிவகாசியை நம்மியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அழைத்து சென்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் பாகாயம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அதிர்ச்சி

அங்கு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட மாணவனின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு  கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு உடலை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் சிவகாசி ஏற்கனவே, இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர். அதிர்ச்சியடைந்த மாணவனின் தந்தை ஜமுனாமரத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

முக வீக்கம்

அதில் தனது மகன் சிவகாசியின் முகத்தில் உள்ள முகப்பருக்களை ஆசிரியை மகாலஷ்மி ஊசியின் மூலம் நீக்கியுள்ளதாகவும், ஊசியில் இருந்த இரும்பு துகள்கள் முகத்தின் முகப்பருவுக்கு உள்ளேயே நின்றுள்ளதால் அதன் பின்னர் அவனது முகம் வீக்கம் அடைந்ததாகவும் கூறியுள்ளார்.

அதன் பின்னர், பள்ளி ஆசிரியர் தனக்கு தகவல் அளித்ததாகவும், பேசவும், நடக்க முடியாத நிலையில் தனது மகன் சென்றுவிட்டதாகக் கவலை தெரிவித்தார்.

இந்நிலையில், மாணவனின் மரணத்துக்குக் காரணமான ஆசிரியை மகாலஷ்மியை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாணவனின் தந்தை புகார் அளித்துள்ளார். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். 

கொட்டும் மழையில்..குதிரையில் ஸ்விக்கி ஊழியர் உணவு டெலிவரி - வைரலாகும் வீடியோ!