கொட்டும் மழையில்..குதிரையில் ஸ்விக்கி ஊழியர் உணவு டெலிவரி - வைரலாகும் வீடியோ!

Viral Video India
By Sumathi Jul 03, 2022 11:46 AM GMT
Report

மும்பையில் கனமழைக்கு இடையில் ஸ்விக்கி டெலிவரி ஊழியர் ஒருவர் குதிரையைப் பயன்படுத்தி உணவுப் பொருள்களை டெலிவரி செய்த வீடியோ சமூக ஊடகங்களில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்விக்கி டெலிவரி

மும்பையில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.

swiggy

சாலைகளை கடக்க முடியாமல் பொது மக்கள் அவதிப்பட்டு வருவதால் ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களிடம் ஆர்டர் செய்து சாப்பிட்டு வருகின்றனர்.

ஆங்காங்கே தண்ணீர்

இந்தநிலையில், மும்பையில் கனமழைக்கு இடையில் ஸ்விக்கி டெலிவரி ஊழியர் ஒருவர் குதிரையைப் பயன்படுத்தி உணவுப் பொருள்களை டெலிவரி செய்த வீடியோ சமூக ஊடகங்களில் இணையத்தில் வைரலாகி வருகிறது.


அந்த ஸ்விக்கி டெலிவரி ஊழியர் பயணம் செய்வது படம்பிடிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரபட்டததை தொடர்ந்து பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டனர்.

குதிரை

இதற்கிடையில், இந்த வார தொடக்கத்தில் மும்பையில் கனமழை பெய்தது, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) நகரில் கனமழை முதல் மிக கனமழை வரை ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்டது.

இடைவிடாத மழைக்கு மத்தியில், கல்பாதேவி மற்றும் சியோன் பகுதிகளில் இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை மற்றும் பாதிக்கப்பட்ட கட்டிடங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.   

காரைக்காலில் காலரா..2 பேர் உயிரிழப்பு-மக்களே உஷார்!