காரைக்காலில் காலரா..2 பேர் உயிரிழப்பு - 144 தடை

Cholera Tamil nadu Puducherry
By Sumathi Jul 03, 2022 11:07 AM GMT
Report

காரைக்காலில் காலரா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

காரைக்கால்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வாந்தி, வயிற்றுப்போக்கு பாதிப்பினால் பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

cholera

இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக காரைக்காலில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

காலரா 

கடுமையான வயிற்றுப்போக்கு, நோய் தொற்று அதிக அளவில் பதிவாகி உள்ளது அம்மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சில நோயாளிகளுக்கு காலரா தொற்று உறுதியாகியுள்ளது.

karaikal

தினசரி மருத்துவமனைக்கு வயிற்றுப்போக்குடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இயக்குனரகம் காரைக்கால் மாவட்டத்தை பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனப்படுத்தி அறிவித்துள்ளது.

2 பேர் பலி

இதனால் பொதுமக்கள் கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும், சாப்பிடும் முன் கைகளை கழுவ வேண்டும் , சரியாக கழுவி சமைத்த உணவுகளை உட்கொள்ள வேண்டும், பாதுகாப்பான கழிப்பிட வசதிகளை பயன்படுத்த வேண்டும்,

திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும், வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை

இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் காலரா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 2 பேர் பலியாகியுள்ளனர். காலராவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இணை நோயால் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

நோய் தடுப்பு முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைய தேவை இல்லை என்றும் வாந்தி , வயிற்றுப்போக்கால் இதுவரை 1,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

உங்களைத் திருமணம் செய்ய என்ன தகுதி வேண்டும்? மனம் திறந்த அமலா பால்!