பானி பூரி விற்பனைக்கு அதிரடி தடை.. சோகத்தில் சாட் பிரியர்கள்!

Cholera India Nepal
By Sumathi Jun 28, 2022 04:14 PM GMT
Report

பானி பூரி விற்பனைக்கு அதிரடியாக தடை விதித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பானி பூரி 

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் பானி பூரியில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் காலரா பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, பானிபூரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

pani pori

இது தொடர்பாக நேபாள சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, காத்மாண்டு பள்ளத்தாக்கு பகுதியில் 7 பேருக்கு காலரா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

 காலரா பரவ வாய்ப்பு

இது தவிர காத்மாண்டு நகரில் 5 பேருக்கும், சந்திரகிரி, புத்தனில்காந்த பகுதியில் தலா ஒருவருக்கு காலரா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தற்போது நேபாளம் முழுவதும் காலரா நோயாளிகள் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

pani pori

காலரா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மாநகராட்சி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பானி பூரி விற்க தடை விதிக்கப்படுகிறது. பானி பூரி விற்பதால் காலரா பரவ வாய்ப்பு அதிகமென்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

விற்க தடை

தற்போது காலரா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், டெக்குவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். காலரா அறிகுறி ஏதேனும் தென்பட்டால், பொது மக்கள் அருகில் உள்ள மருத்துவமனையை அணுக வேண்டும்.

கோடை மற்றும் மழைக்காலங்களில் பரவும் வயிற்றுப்போக்கு, காலரா போன்ற நோய்கள் குறித்து ஒவ்வொருவரும் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அதிமுக உங்க அப்பனோட கட்சி இல்லை.. ஈபிஎஸ்-க்கு எதிரான போஸ்டரால் பரபரப்பு!