Saturday, Apr 12, 2025

பொல்லார்டுக்கு டாட்டா காட்டும் மும்பை அணி ... அடுத்தப் போட்டியில் களமிறங்கும் புதிய வீரர்...

Mumbai Indians TATA IPL IPL 2022 Kieron Pollard
By Petchi Avudaiappan 3 years ago
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள ஆட்டத்தில் விளையாடவுள்ள மும்பை அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடப்பு ஐபிஎல் தொடர் முன்னாள், நடப்பு சாம்பியன்களான மும்பை, சென்னை அணிகளுக்கு மிகப்பெரிய சோதனையான ஒன்றாக அமைந்துள்ளது. குறிப்பாக மும்பை அணி ஐபிஎல் வரலாற்றில் சீசன் தொடக்கத்தில் தொடர்ந்து 8 போட்டிகளில் தோற்ற அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.

பொல்லார்டுக்கு டாட்டா காட்டும் மும்பை அணி ... அடுத்தப் போட்டியில் களமிறங்கும் புதிய வீரர்... | Mumbai Indians Planning To Change Team Structure

இதனால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் அந்த அணி உள்ளது. இன்னும் 6 போட்டிகள் மீதமுள்ள நிலையில் மும்பை அணி கிட்டத்தட்ட தொடரில் இருந்து வெளியேறி விட்டது. அதேசமயம் எஞ்சியுள்ள சீசனை முடிக்கும் போது சிறப்பாக முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மும்பை உள்ளது.

இதனால் அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தொடக்க வீரராக களமிறங்கும் இஷான் கிஷன் மீண்டும் நடுவரிசையில் விளையாட உள்ளதாகவும், திலக் வர்மாவை ரோகித்துடன் தொடக்க வீரராக களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து மும்பை அணியின் அதிரடி வீரர் பொல்லார்டை கழட்டி விட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலாக ஃபெபியன் ஆலனுக்கு வாய்ப்பு கொடுத்து அவரை தயார் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆலன் பயிற்சி எடுக்கும் வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ள நிலையில் அர்ஜூன் டெண்டுல்கருக்கும் மீதமிருக்கும் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.