ஸ்விக்கி பாயை ஷூவை கழட்டி சரமாரியாக தாக்கிய பெண் - ராங் ரூட்டால் வந்த வினை

zomato swiggy swiggyboybeaten onlinefooddelivery
By Petchi Avudaiappan Apr 16, 2022 04:29 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

விபத்தை ஏற்படுத்திய ஸ்விக்கி உணவு டெலிவரி ஊழியரை இளம்பெண் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

பிரபல உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி, சொமேட்டோ போன்றவை இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளை அளித்து வருகிறது. இதில் பணியாற்றும் ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் டெலிவரி செய்ய வேண்டும் என்பதால்  கண்மூடித்தனமாக பைக்கை ஓட்டுவதும், தவறான பாதையில் புகுந்து செல்வதும்  வழக்கமாக நடக்கும் ஒன்று. 

அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் ஸ்விக்கி டெலிவரி பாய்க்கு நடந்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அங்குள்ள ஜபல்பூர் நகர் பகுதியில் நேற்று வழக்கம் போல போக்குவரத்து பரபரப்பாக காணப்பட்ட வேளையில் ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டு சென்ற இளம்பெண்ணின் முன்பாக ஸ்விக்கி டெலிவரி பாய் தவறான பாதையில் குறுக்கே வந்துள்ளார்.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பெண் கீழே விழுந்ததால் அவருக்கு காயம் ஏற்பட்டதோடு பைக்கிற்கும் சேதம் ஏற்பட்டது. இதனால் கடுப்பான அந்த பெண் தனது ஷூவை கழட்டி டெலிவரி பாயை திட்டிக்கொண்டே சரமாரியாக தாக்கினார். அப்பெண்ணிடம் அங்கிருந்தவர்கள் அடிப்பதை நிறுத்துமாறு சொல்லியுள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்டவள் நான்தான். நீங்கள் இல்லை என்று கூறி தொடர்ந்து அடித்தார். 

இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலான நிலையில் அடி வாங்கிய ஸ்விக்கி டெலிவரி பாய் பெயர் விஸ்வகர்மா என்பதும், பீட்ஸா டெலிவரிக்காக அவர் வேகமாக சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளதும் தெரிய வந்தது.