ஆபாசமாக சித்தரிப்பு - படங்களை காட்டி மிரட்டி வரும் வட மாநில கும்பல்!

Sexual harassment Uttar Pradesh India West Bengal
By Sumathi Jun 21, 2022 01:24 PM GMT
Report

தமிழ்நாட்டில் இளைஞர்கள், இளம்பெண்களை ஆபாசமாக சித்தரித்து அவர்களின் படங்களை உறவினர்களுக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டி வருகிறது ஒரு வடமாநில கும்பல்.

சைபர் கிரைம் 

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே புளியம்பட்டியை சேர்ந்த விஷ்ணுபிரியன் (25) என்ற எலக்ட்ரீசியன்  அம்மாவட்ட எஸ்பி அலுவலகம் சென்று சைபர் குற்ற போலீசில் புகார் கொடுத்தார்.

ஆபாசமாக சித்தரிப்பு - படங்களை காட்டி மிரட்டி வரும் வட மாநில கும்பல்! | Tamil Nadu Gang Exhorts Youths With Morphed Images

இதேபோல், கடந்த சில நாட்களில் மட்டும் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசுக்கு 15க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது. இளம்பெண்களை ஆபாசமாக சித்தரித்து உறவினர்களுக்கே அனுப்பி வைத்திருப்பதால் கண்ணீர் விட்டு கதறியபடி படத்தை

 உபி, மேற்குவங்கம்

முதலில் நீக்க நடவடிக்கை எடுங்கள் என போலீசில் தெரிவித்துள்ளனர். இப்புகார்கள் பற்றி சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதில், இம்மோசடியில் உபி, மேற்குவங்கத்தில் இருக்கும் நபர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

ஆபாசமாக சித்தரிப்பு - படங்களை காட்டி மிரட்டி வரும் வட மாநில கும்பல்! | Tamil Nadu Gang Exhorts Youths With Morphed Images

அக்கும்பல் பற்றி தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், இம்மாதிரி மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் போனில் பேசியிருக்கிறோம்.

மோசடி 

அவர்கள் எதற்கும் துணிந்தவர்களாக இருக்கின்றனர். காரணம், அனைத்தும் போலியான முகவரியில் மோசடி வேலையில் ஈடுபடுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் கணவருடன் ஒரு இளம்பெண் வந்து புகார் கொடுத்தார்.

அந்த பெண்ணை மிகவும் அசிங்கமாக சித்தரித்து அவரது உறவினர்கள் அனைவருக்கும் படமாக அனுப்பி வைத்து மிரட்டியுள்ளனர். அக்கும்பலை பற்றி விசாரித்தபோது, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இருப்பது தெரியவந்துள்ளது.

ஆப்களில் கடன்

அவர்கள் பற்றி தொடர்ந்து விசாரித்து வருகிறோம், என்றனர். மாநிலம் முழுவதும், தங்களின் படத்தை ஆபாசமாக சித்தரித்து உறவினர்களுக்கு அனுப்பி வைத்து பணம் கேட்டு மிரட்டுவதாக சைபர் கிரைம் போலீசுக்கு இதுவரை 100க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது.

புகார் கொடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள், 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள். கல்லூரி மாணவர்கள், மாணவிகள் அவசரத்திற்கு ரூ.1000, ரூ.2000 கடன் கிடைக்கிறது என ஆப்களில் கடன் பெறுகின்றனர்.

அவர்களே இத்தகைய மோசடி கும்பலிடம் சிக்கி சின்னாபின்னமாகின்றனர். அதனால், யாரும் முன்பின் தெரியாத நபர்களிடம் செல்போன் வாட்ஸ்அப்களில் உரையாடுவதை தவிர்க்க வேண்டும்.

அவர்கள் அனுப்பும் கடன் ஆப்களை உள்ளீடு செய்யக்கூடாது என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்ைக விடுத்துள்ளனர். மேலும், ஏமாந்தவர்கள் 24 மணி நேரத்திற்குள் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். 

விக்ரம் எண்ட்ரி சீனில் பயத்தோடுதான் நடித்தேன்.. விஜய் சேதுபதி ஓபன் டாக்!