விக்ரம் எண்ட்ரி சீனில் பயத்தோடுதான் நடித்தேன்.. விஜய் சேதுபதி ஓபன் டாக்!
இயக்குனரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதே நடிகர்களின் கடமை என்பதால் சட்டை இன்றி பயந்தபடியே நடித்தேன் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி
தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் நடிகராக அறிமுகமான விஜய் சேதுபதி, அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அதேபோல் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று முரண்டுபிடிக்காமல், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். குறிப்பாக ரஜினிக்கு வில்லனாக பேட்ட, விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் போன்ற படங்களில் நடித்துள்ள இவர்
அமோக வரவேற்பு
அண்மையில் கமலின் விக்ரம் படத்திலும் வில்லனாக மிரட்டினார். இப்படத்தில் சந்தானம் என்கிற போதை கடத்தல் ஏஜண்ட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அந்த கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த கதாபாத்திரத்தின் எண்ட்ரி சீனில் நடிகர் விஜய் சேதுபதி, சட்டை இன்றி நடித்திருப்பார்.
பயம் இருந்தது
இந்த சீன் செம்ம மாஸாக இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்தனர். ஆனால் இந்த சீனில் சட்டை அணியாமல் தொப்பையுடன் நடித்தபோது, ரசிகர்கள் கிண்டலடித்து விடுவார்களோ என்று பயந்ததாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சட்டையில்லாமல் நடிக்க வேண்டும் என சொன்னபோது மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா என்கிற பயம் எனக்கு இருந்தது.
முதலில் நான் பனியன் அணிந்தபடி நடிக்கட்டுமா என கேட்டேன். ஆனால் லோகேஷ் சட்டையின்றி நடித்தால் தான் நன்றாக இருக்கும் என சொல்லிவிட்டார்.இயக்குனரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதே நடிகர்களின் கடமை என்பதால் சட்டை இன்றி பயந்தபடியே நடித்தேன்.
படம் ரிலீசானதும் நிச்சயம் கிண்டலடிப்பார்கள் என நினைத்தேன். ஆனால் ரசிகர்கள் அதனை நல்ல மனசோடு ஏற்றுக்கொண்டார்கள். சந்தோஷமாக இருந்தது என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
திருமணம் எப்போது? கடுப்பான நடிகை அபர்ணா பாலமுரளி!