உள்ளாடை குறித்து ஆபாசமாக கேள்வி கேட்ட ரசிகர் - தரமான பதிலடி கொடுத்த பிரியா பவானி ஷங்கர்
நடிகை பிரியா பவானி ஷங்கர் ரசிகர் ஒருவர் கேட்ட ஆபாச கேள்விக்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார்.
செய்தி வாசிப்பாளராக தொடங்கி பின்னர் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் பிசியான நடிகையாக வலம் வரும் பிரியா பவானி ஷங்கர் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மாஃபியா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அடுத்ததாக இவர் நடிப்பில் யானை, ராகவா லாரன்ஸின் ருத்ரன், தனுஷுடன் திருச்சிற்றம்பலம், எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பொம்மை, ஷங்கர் இயக்கும் இந்தியன் 2, சிம்புவின் பத்து தல உட்பட பல படங்கள் வெளியாகவுள்ளது.
பிரியா பவானி ஷங்கர் நேற்று முன்தினம் இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட ஏராளமான கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர், உங்களது உள்ளாடை சைஸ் என்ன என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பிரியா, மார்பகங்களை நான் வேற்று கிரகத்தில் இருந்து வாங்கி வரவில்லை. உங்கள் வாழ்க்கையில் உள்ள பெண்களுக்கும் அது உள்ளது. அவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.