ஆபாச பேச்சு... செக் வைத்த சைபர் கிரைம் போலீசார்... - பயத்தில் வீடியோ வெளியிட்ட டிக்டாக் சாதனா
டிக்டாக் பிரபலம் திருச்சி சாதனா... திடீரென குறும்படத்தில் நடிப்பார். திடீரென சிட்டியில் விசிட் அடிப்பார்... அப்புறம் பார்த்தால் காட்டுவாசியாக காட்டுக்குள் திரிவார். இவருக்கான முகம் என்னவென்று யாருக்கும் தெரியாது.
அவருக்கே தெரியுமா என்றும் தெரியாது. கெட்ட வார்த்தைகள் பேசுவது, விளக்குமாறு எடுத்து அடிப்பது, செருப்பை எடுத்து துரத்துவது என இவர்கள் செய்த அட்ராசிட்டிகன் நெட்டிசன்களை முகம் சுழிக்க வைத்தது.
இதனையடுத்து, நெட்டிசன்கள் சாதனா மீது சைபர் கிரைம் காவல்துறையில் புகார் கொடுத்தனர். சாதனா மீது ஒருவர் இருவர் அல்ல கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்டோரின் புகார்கள் வந்ததால் சைபர் கிரைம் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருக்கிறது.
இதனையடுத்து, திருச்சி சாதனாவுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பினர். அந்த சம்மனில், தங்கள் மீது ஆபாச செய்கைகள் செய்வதாக புகார்கள் வந்துள்ளது.
உங்கள் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு போலீசார் மெமோ அனுப்பி இருக்கின்றனர்.
இதனால் மிகவும் பயந்துபோன திருச்சி சாதனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இனிமேல் ஆபாசமாகப் பேசியும், நடித்தும் வீடியோக்கள் வெளியிட மாட்டேன். யூட்யூபர்கள் தனது பழைய வீடியோக்களை பயன்படுத்த வேண்டாம் என்று கண்ணீர் விட்டு அழுது கோரிக்கை விடுத்துள்ளார். பவ்யமாக சாதனா பேசியதையடுத்து, நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் பங்கமாய் கலாய்த்து வருகின்றனர்.