நடிகை திரிஷாவின் உதட்டுக்கேற்ப அதை செய்தேன் - போட்டுடைத்த பிரபலம்!

Jiyath
in பிரபலங்கள்Report this article
96 படத்தின் பாடல் ஒலிப்பதிவின் போது நடந்த ஒரு நிகழ்வு குறித்து பாடகி சின்மயி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
96 திரைப்படம்
இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ‛96'. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டி வெளியான 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், 96 படத்தின் பாடல் ஒலிப்பதிவின் போது நடந்த ஒரு நிகழ்வு குறித்து பாடகி சின்மயி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
பேட்டி
அதில், "இந்த படத்தில் தென்றல் வந்து தீண்டும் போது என்ற பாடலை பாடும்போது ஏற்கனவே படமாக்கப்பட்ட அந்த காட்சிகளை திரையில் ஓட விட்டு, திரிஷாவின் உதட்டு அசைவுக்கு ஏற்ப, தான் பின்னணி பாடியதாக தெரிவித்திருக்கிறார்.
அப்படி அவரது உதட்டு அசைவுக்கு பாடுவது பெரிய சவாலாக இருந்தது என்றும் தெரிவித்திருக்கும் சின்மயி, அது குறித்த வீடியோவை வெளியிட்டு இதை பார்த்தாலே நான் அவர் உதட்டு அசைவுக்கு ஏற்ப எப்படி பாடியிருக்கிறேன் என்பதை புரிந்து கொள்ள முடியும்" என்று தெரிவித்துள்ளார்.