நடிகை த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சு - மன்சூர் அலிகான் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை!
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சர்ச்சை பேச்சு
சமீபத்தில் நடைபெற்ற பத்தரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அவர் பேசியதாவது "சினிமாவில் இப்போதெல்லாம் கற்பழிக்கவே விடுவதில்லை.
லியோ படத்தில் த்ரிஷாவும் நடிக்கிறார் என்றவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. அவ்வளவு அழகான த்ரிஷாவுடன் வில்லனாகிய எனக்கு எப்படியும் ஒரு படுக்கையறை காட்சி இருக்கும். அவரை அப்படியே மெத்தையில் போட்டு ரேப் செய்வதை போல எனக்கு காட்சி இருக்கும்.. என மன்சூர் அலிகான் கொச்சையாக பேசியிருந்தார். அவரின் இந்த ஆபாச பேச்சுக்கு நடிகை த்ரிஷா உடனடியாக கண்டனம் தெரிவித்தார்.
மன்சூர் அலிகான் மீது வழக்கு
மேலும், நடிகைகள் மாளவிகா மோகனன், பாடகி சின்மயி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்தது.
மேலும், மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் கூறிவந்தனர். இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என நடிகை குஷ்புவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதியுமாறு டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்திய நிலையில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது