சரி த்ரிஷா கிடைக்கல.. மடோனா பாப்பா கூட விளையாடுவோம் - மன்சூர் அலிகான் பகீர்!
நடிகைகள் குறித்த நடிகர் மன்சூர் அலிகானின் ஆபாச பேச்சுக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சர்ச்சை பேச்சு
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த 'லியோ' திரைப்படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் இனைந்து நடித்திருந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அவர் பேசியதாவது "சினிமாவில் இப்போதெல்லாம் கற்பழிக்கவே விடமாட்டுகிறார்கள். லியோ படத்தில் த்ரிஷாவும் நடிக்கிறார் என்றவுடன் மகிழ்ச்சியாக இருந்தது.
அவ்வளவு அழகான த்ரிஷாவுடன் வில்லனாகிய எனக்கு எப்படியும் ஒரு படுக்கையறை காட்சி இருக்கும். அவரை அப்படியே மெத்தையில் போட்டு ரேப் செய்வதை போல எனக்கு காட்சி இருக்கும் என கொச்சையாக பேசியிருந்தார். அவரின் இந்த ஆபாச பேச்சுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், ரசிகர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்கள் கண்டனம்
மேலும், மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலர் கூறி வருகின்றனர். இந்நிலையில், இப்போது மட்டுமல்ல லியோ பட வெற்றி விழாவிலும் நடிகர் மன்சூர் அலிகான் அதே உள்நோக்கத்துடன்தான் பேசியிருந்தார் என அவரது வீடியோவை பதிவிட்டு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த விழாவில் அவர் பேசியதாவது "இந்த படத்தில் த்ரிஷா இருக்காங்கனு சொன்னதும் வழக்கம் போல துரத்துற சீன்லாம் இருக்கும். ஜாலி பண்ணலாம்னு நினைச்சேன். ஆனால், லோகேஷ் நெருங்கவே விடல. சரி த்ரிஷா தான் கிடைக்கலன்னு இருந்தா மடோனா பாப்பா வந்தாங்க.
மடோனா வந்துட்டாங்க அவங்களோட ஏதாவது விளையாடலாம்னு பார்த்தா கடைசியில தங்கச்சி ரோல்' என மன்சூர் அலிகான் பேசியிருந்தார். இதனை இப்போது பதிவிட்டு ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர், இதனை அப்போதே த்ரிஷாவும், மடோனாவும் கண்டித்திருக்க வேண்டும் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.