பெண்களே ஏன் அப்படி காட்றீங்க.. அது பண்ண மனசே வரல - பிரபல இயக்குநர் சர்ச்சை பேச்சு!
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பெண்கள் குறித்து பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது
ஆர்.வி.உதயகுமார்
90ஸ்-களில் பிரபலமான இயக்குநராக வளம் வந்தவர் ஆர்.வி.உதயகுமார். உரிமை கீதம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து கிழக்கு வாசல், சின்ன கவுண்டர், சிங்கார வேளாண், எஜமான் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

மேலும், சில படங்களில் ஆர்.வி.உதயகுமார் நடிக்கவும் செய்துள்ளார். இந்நிலையில் என் சுவாசமே என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆர்.வி.உதயகுமார் பெண்கள் குறித்து பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் பேசியதாவது, "மேடையில் ஒருவர் சொன்னார். பெண்ணியம் பேசுபவர்களே பெண்களை ஆபாசமாக காட்டுகிறார்கள் என்று. நான் சொல்கிறேன்.
சர்ச்சை பேச்சு
பெண்கள் தங்களை தாங்களே அவுத்துப்போட்டு காண்பிக்கிறார்கள். பெண்களே ஏன் இப்படி அவுத்துப்போட்டு காட்டுறீங்க என்று அவர்களை பார்த்துதான் கேட்க வேண்டும். எப்படி எல்லாம் தெரியும்படி உடை அணிய வேண்டும் என்பதை பெண்கள் ஆராய்ச்சி செய்வார்கள் போல.

தமிழ் சினிமாவைக்கூட காப்பாற்றிவிடலாம். ஆனால் முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பெண்கள் அவர்களாகவே வீடியோ எடுத்து போடுகிறார்கள். அதனை பார்ப்பவர்களை எப்படி காப்பாற்ற முடியும்.
அதைப் பார்த்ததும் நமக்கே செல்போனை ஆப் செய்ய மனசு வராது" என்று பேசினார். அவரின் இந்த பேச்சை கேட்டதும் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி முகம் சுழித்தபடி மேடையில் நின்றார்.
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil