சிம்புவை நினைத்து உருகிய ஸ்ரீநிதி.. மருத்துவமனையில் அனுமதி?

Silambarasan Tamil Cinema Serials Gossip Today
By Sumathi 3 மாதங்கள் முன்

 சிம்புவை கல்யாணம் பண்ண ஆசைப்பட்ட ஸ்ரீநிதி, புழல் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீநிதி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை ஸ்ரீநிதி. அடுத்தடுத்து இவரது நடிப்பு திறமையால், ரோமாபுரி பாண்டியன், பகல் நிலவு, வள்ளி, என பல சீரியல்களில் நடித்து நடித்துள்ளார்.

சிம்புவை நினைத்து உருகிய ஸ்ரீநிதி.. மருத்துவமனையில் அனுமதி? | Simbu Obsessed Sreenidhi Is In Hospital

அதனை தொடர்ந்து, ஜீ தமிழில் ஒளிப்பரப்பான யாரடி நீ மோகினி மற்றும் புதுப்புது அர்த்தங்கள் சீரியல்கள் இவர் நடித்த ரோல் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

உயிருக்கு ஆபத்து

கடந்த சில வாரங்களாக இன்ஸ்டாகிராமில் பரபரப்பை ஏற்படுத்தும் பல பதிவுகளை போட்டு வருகிறார். வலிமை படம் குறித்து இவர் பகிர்ந்த வீடியோ ஒன்று கடும் சர்ச்சைகளை கிளப்பியது.

சிம்புவை நினைத்து உருகிய ஸ்ரீநிதி.. மருத்துவமனையில் அனுமதி? | Simbu Obsessed Sreenidhi Is In Hospital

தன்னை திருமணம் செய்துகொள்ளக் கோரி நடிகர் சிம்பு வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, சில நாட்கள் கழித்து சீரியல் நடிகை நட்சத்திரா உயிருக்கு ஆபத்து என வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.

 கவுன்சிலிங்

இதையடுத்து, அவரது அம்மா அளித்த பேட்டியில், ஸ்ரீநிதி டிப்ரஷனில் இருப்பதாலே இப்படியெல்லாம் பேசுவதாகவும், அவரை யாரும் திட்ட வேண்டாமென்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது, ஸ்ரீநிதி சென்னை புறநகரான புழல் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிகிச்சை மையத்தில் கவுன்சிலிங் மற்றும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.    

இரட்டைக் குழந்தைகளுக்கு தாயான சின்மயி - புகைப்படம் வைரல்!