Saturday, Jun 28, 2025

இரட்டைக் குழந்தைகளுக்கு தாயான சின்மயி - புகைப்படம் வைரல்!

Tamil Cinema Tamil nadu Viral Photos
By Sumathi 3 years ago
Report

பிரபல பின்னணி பாடகி சின்மயி, இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் இவர் பாடிய முதல் திரைப்படப் பெரிய அளவில் ஹிட் ஆன நிலையில்,

பாடகி சின்மயி

பல படங்களில் பாடி அசத்தியுள்ளார். அத்துடன் பல படங்களில் கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் ராகுல் ரவீந்திரன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

இரட்டைக் குழந்தைகளுக்கு தாயான சின்மயி - புகைப்படம் வைரல்! | Chinmayi Sripaada Gives Birth To Twin Babies

திருமணத்தில் கலந்து கொண்டவர்களிடம், பரிசு பொருள் எதுவும் வாங்காமல் அதற்கு பதில், லடாக்கில் உள்ள மலை சாதியினரின் பள்ளிக்கு கட்டிடம் கட்ட உதவும்படி கேட்டு ஆச்சரியப்படுத்தினார்.

இரட்டைக் குழந்தை

சின்மயியை சுற்றி கடந்த சில ஆண்டுகளாகவே சர்ச்சையான கருத்துக்களும், விமர்சனங்களும் வலம் வர தொடங்கி விட்டன. கவிஞர் வைரமுத்து மீது அவர் கொடுத்த மீடூ புகார் ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சியடைய செய்தது.

அன்றிலிருந்து இன்றுவரை சின்மயி தொடர்ந்து அதுகுறித்து சமூகவலைதளங்களில் பேசி வருகிறார். இந்நிலையில் பாடகி சின்மயி - ராகுல் ரவீந்திரன் தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.

இதை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ள தம்பதி, டிரிப்தா மற்றும் ஷர்வாஸ் என குழந்தைகளின் பெயரை குறிப்பிட்டு, வரவேற்றுள்ளனர்.    

14 வயது சிறுமிக்கு 40 வயது நபருடன் திருமண ஏற்பாடு.. பாட்டிக்கு வலைவிரித்த போலீசார்!