குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் மரணம் - மருத்துவமனை அலட்சியம்!

Tamils Tamil nadu Chennai
By Sumathi Jun 05, 2022 08:07 AM GMT
Report

சென்னையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை

சென்னை முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் குமார்(35). இவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு வினோதினி (30)என்ற மனைவியும், சோனியா(5) மகளும், மோனிஷ்(2) என்ற மகனும் உள்ளனர்.

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் மரணம் - மருத்துவமனை அலட்சியம்! | Women Dies After Doing Family Planning Operation

கடந்த 30-ஆம் தேதி இவருடைய மனைவி வினோதினிக்கு சின்னபோரூரிலுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்

இதனையடுத்து, 3 தினங்களாக கடுமையான வயிற்று வலி மற்றும், சிறுநீர், மலம் வெளியேறாமல் இருந்துள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் தவறான சிகிச்சையால் தான் வினோதினி உயிரிழந்துள்ளார் என குற்றம் சாட்டியுள்ளனர்.

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் மரணம் - மருத்துவமனை அலட்சியம்! | Women Dies After Doing Family Planning Operation

இது குறித்து அவர்கள், சின்னப்போரூர் அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின் பொழுது கர்ப்பப்பைக்கு செல்லும் குழாயை தடை செய்யும் பொழுது, அருகில் இருக்கும் சிறுநீரக பாதை மற்றுப் மலம் வெளியேறும் பாதைக்கான குழாயை சேதப்படுத்தியுள்ளனர்.

இதனால் சிறுநீர் மற்றும் மலம் ஆகியவை வெளியேறாமல், அந்த பாதையில் இருந்து கசிந்து, வயிறு முழுவதும் மலம் மற்றும் சிறுநீர் நிறைந்தது என கூறியுள்ளனர். அதனால் தான் வயிற்றுப்பகுதி வீக்கமடைந்திருப்பதாகவும், இதன் காரணமாக குடல் பகுதி முழுவதும் அழுகியதுடன், கிட்னியும் செயலிழந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவிப்பதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் உடற்கூறு ஆய்விற்கு தங்களது கையெழுத்து இல்லாமலேயே உடலை எடுத்துச்சென்றுள்ளதாகவும், இதில் தவறான அறிக்கை தயார் செய்ய முடியும் எனவும் சந்தேகம் எழுப்பியுள்ள உறவினர்கள் உடலை வாங்க மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.