ஸ்ரீநிதி கூறுவதை யாரும் நம்பாதீங்க... - வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை - ஷாக்கான ரசிகர்கள்

Viral Video
By Nandhini 6 மாதங்கள் முன்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பராகி வந்த 7C சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி. இதையடுத்து அவருக்கு பல வாய்ப்புகள் தேடி வந்தன.

தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாராடி நீ மோகினி என்ற சீரியல் தொடரில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகர் சிம்பு தனக்கு லவ் டார்ச்சர் கொடுத்து வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி சிம்புவின் வீட்டு முன் அவர் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார்.

சிம்புவைத் தவிர நான் வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தான் போராட்டமா? லவ்வுக்குலாம் போராட்டம் இல்லையா? என்று இன்ஸ்டாவில் பதிவிட்டார்.

மற்றொரு பதிவில் போனில் 4 சதவீதம் தான் சார்ஜ் உள்ளது. ப்ளீஸ் வாங்க. பர்ஸ்ட்டு சிம்பு வேணும், நெக்ஸ்ட் தண்ணி வேணும். எனக்கு அவ்ளோ ஒர்த்துனு இவ்ளோ வருஷமா எனக்கே தெரியல, புரிய வச்சிட்டாரு! அவர் வேணும், அவரை பார்க்கணும், இப்பவே” என்று இன்ஸ்டாவில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த பதிவுகள் இணையதளத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது.

யாரடி நீ மோகினி சீரியலில் நாயகியான நக்‌ஷத்ராவும், நானும் நெருங்கிய தோழிகள். இவரும், அதே தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறோம். நடிகை நக்‌ஷத்ராவுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்நிலையில், ஸ்ரீநிதி கண்ணீர் விட்டு அழுது பேசும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், நக்‌ஷத்ரா ரொம்ப நல்ல பெண். அவளுக்கு அப்பா இல்ல. ரொம்ப கஷ்டப்பட்டு முன்னேறி வந்தவள். ஆனா, இப்போ கல்யாண விஷயத்துல ஏமாந்துக்கிட்டு இருக்கா. அவளுடைய வருங்கால கணவர் நல்லவர் இல்ல. அவரின் குடும்பம் நக்‌ஷத்ராவை ஏமாத்தி வருகிறது. நியாயம் கேட்க போனால் என்னையும் அடிக்க வர்றாங்க. அவளோட வாழ்க்கை நல்லா இருக்கணும், வி.ஜே. சித்ராவுக்கு ஏற்பட்ட நிலைமை அவளுக்கு வந்துவிடக்கூடாது என்று அந்த வீடியோவில் கதறி கண்ணீர் விட்டு அழுதபடியே பேசி இருக்கிறார். ஆனால், இவ்வளவு பேசிய அவர், பதிவிட்ட சிறிது நேரத்திலேயே அந்த வீடியோவை அவர் நீக்கி விட்டார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இந்நிலையில், ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் நாயகியான நக்‌ஷத்ரா தற்போது இது குறித்து ஒரு வீடியோ ஒன்றை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவில் அவர் கூறுகையில், ஸ்ரீநிதி கூறுவது எதுவும் உண்மையில்லை. என் மாமியார், மாமனார், என் வருங்கால கணவர் என்னை நல்லபடியாக பார்த்துக் கொள்கிறார்கள். ஸ்ரீநிதி சொல்வதை வைத்து யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவர் ஏதோ தெரியாமல் அப்படி செய்து விட்டாள் என்று பேசியுள்ளார். 

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.