இந்தப் பிரச்சனை இருந்தால் தெரியாமல் கூட சுரைக்காய் சாப்பிடாதீங்க.. எதனால் தெரியுமா?
சுரைக்காய் சாப்பிடுவது சில சந்தர்ப்பங்களில் பெண்களுக்கு ஆபத்தானவை எனக் கூறப்படுகின்றன.
சுரைக்காய்
சுரைக்காயில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் அதிகமுள்ளன. இது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
மலச்சிக்கல் உள்ளவர்கள் தொடர்ந்து சுரைக்காய் சாறு உட்கொள்வதன் மூலம் பலன் பெறலாம். இதில், சட்னி, சாம்பார், சுரைக்கய் பருப்பு, சுரைக்காய் ஜூஸ், சுரைக்காய் தக்காளி குழம்பு என விதவிதமான வகைகளை செய்து சாப்பிடலாம்.
யாருக்கு ஆபத்து?
ஆனால், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருந்தாலும், இந்த காய்கறியை சாப்பிட்டால் சில சமயங்களில் பெண்களுக்கு ஆபத்தாக முடியும். குறிப்பாக குறைந்த இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஆபத்தானது.
மேலும், கர்ப்பிணிப் பெண்கள் சுரைக்காய் சாப்பிடுவது சிறந்தது அல்ல. ஒவ்வாமை நோயாளிகளும் இந்த காய்கறியை தவிர்க்க வேண்டும். வாயு, அஜீரணம் அல்லது வயிற்றுப் புண் இருந்தாலும் சுரைக்காயை தவிர்ப்பது நல்லது.
இருப்பினும், மிகச் சிறிய அளவுகளை உட்கொள்வதால் எந்தத் தீங்கும் இல்லை.
சுரைக்காய் சாப்பிட்டவுடன் யாருக்காவது அரிப்பு, தோலில் சொறி, மூச்சு விடுவதில் சிரமம், தொண்டை வீக்கம் போன்றவை ஏற்பட்டால், உங்களுக்கு அலர்ஜி பிரச்சனை இருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என மருத்துவர்காள் தெரிவிக்கின்றனர்.