விடியா அரசில் தொடரும் லாக் அப் மரணங்கள் : கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி

ADMK DMK Edappadi K. Palaniswami
By Irumporai Jun 13, 2022 07:01 AM GMT
Report

திமுக ஆட்சியில் லாக் அப் மரணங்கள் தொடர் கதையாகி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் திமுக அரசானது ஆட்சி பொறுப்பினை ஏற்றவுடன் அரசின் மீது எதிர்கட்சிகள் தற்போது அதிகமாக வைக்கும் விமர்சனங்களில் ஒன்று காவல்நிலையங்களில் உள்ள சிறையில் நடக்கும் லாக் அப் மரணங்கள் .

தொடரும் லாக் அப் மரணங்கள்

இந்த நிலையில் திமுக ஆட்சியில் லாக் அப் மரணங்கள் தொடர் கதையாகி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இவை குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் :

மீண்டும் ஒரு லாக்-அப் மரணம், சென்னை கொடுங்கையூரில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட திரு.ராஜசேகர் என்பவர் காவல்நிலையத்தில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை தருகிறது.இந்த ஆட்சியில் லாக்-அப் மரணங்கள் தொடர்கதையாகி வருவதை நாங்கள் பலமுறை சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் இல்லை .

விடியாஅரசில் தொடரும் லாக்கப் மரணங்கள்

இவ்வாட்சியில் லாக்-அப் மரணங்களை தடுக்கவோ, காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவோ முடியாது என்பதை இச்சம்பவங்கள் நிரூபித்துவிட்ட நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விடியாஅரசில் நடந்த லாக்கப் மரணங்கள் குறித்து சட்டப்படி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன் எனக் கூறியுள்ளார்.

விடியா அரசில் தொடரும் லாக் அப் மரணங்கள் : கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி | Serial Lock Up Deaths Edappadi Palanisamy

  இந்நிலையில் கொடுங்கையூரில் விசாரணை கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக சென்னை கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார் .

எப்படி இருக்கிங்க ,எடப்பாடி பழனிசாமியின் கைகளைப் பிடித்து நலம் விசாரித்த பிரதமர்