போதைப்பொருள் மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ADMK DMK Edappadi K. Palaniswami
By Irumporai Jun 08, 2022 02:26 PM GMT
Report

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து உள்ளதாகவும், தமிழகம் போதைப்பொருள் மாநிலமாக மாறி வருவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்

போதைப் பொருள் மாநிலமாக மாறும் தமிழகம் :

சேலம் மாவட்டம் ஓமலூரில், அ.தி.மு.க., புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் கட்சி நிர்வாகிகளுடன் அக்கட்சி இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி:

போதைப்பொருள் மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு | Drug State Edappadi Palanisamy Accused

திமுக அரசு பொறுப்பேற்ற பின் ஆதீனங்களின் ஐதீகத்தை மீறி செயல்படுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. போதைப்பொருள் மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது. 

எல்லாம் கற்பனை:

ஆன்லைன் ரம்மி கந்துவட்டி கொடுமை ஆகியவற்றால் பலர் தற்கொலை செய்துள்ளனர். தமிழக அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு நடிகர்கள் யாரும் துணை போகக் கூடாது. அதிமுகவுக்கு பொதுச்செயலாளர் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுவது கற்பனையானது எனக் கூறிய எடப்பாடிபழனிச்சாமி

அதிமுகவுக்கு ஒற்றை தலைமை என யார் கிளப்பி விடுகிறார்கள் என தெரியவில்லை. கட்சியிலேயே இல்லாத சசிகலா குறித்து மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்புவது ஏன்? ஆளுங்கட்சியை தவிர்த்து எல்லாமே எதிர்க்கட்சி தான் அதில் பிரதான எதிர்க்கட்சி அதிமுகாதான் என்று கூறியுள்ளார். 

போதைப்பொருள் மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு | Drug State Edappadi Palanisamy Accused

மேலும் , முன்கூட்டியே மேட்டூர் அணையை திறந்து உள்ளதால் கடைமடை பகுதியில் தூர்வார முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்பட்டதால் தமிழகத்தில் ஏழை குழந்தைகள் கல்வி பாதிக்கும். இதை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.