Wednesday, Jul 9, 2025

எப்படி இருக்கிங்க ,எடப்பாடி பழனிசாமியின் கைகளைப் பிடித்து நலம் விசாரித்த பிரதமர்

Narendra Modi Edappadi K. Palaniswami
By Irumporai 3 years ago
Report

எடப்பாடி பழனிசாமி வணக்கம் வைக்க அவரது கைகளைப் பிடித்து தோளை தட்டிக்கொடுத்து நலம் விசாரித்த பிரதமர்மோடி .

சென்னை பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மாலை 5 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தார்.

சென்னை வந்த பிரதமரை கவர்னர் ஆர்.என்.ரவி அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஜி.கே.வாசன், சென்னை மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

எப்படி இருக்கிங்க ,எடப்பாடி பழனிசாமியின்  கைகளைப் பிடித்து நலம் விசாரித்த பிரதமர் | Edappadi Palanisamy Was The Prime Minister

எடப்பாடி பழனிசாமி வணக்கம் வைக்க அவரது கைகளைப் பிடித்து தோளைக் தட்டிக்கொடுத்து நலம் விசாரித்தார் பிரதமர். இதேபோலவே வாசனின் தோளையும் தட்டிக்கொடுத்தார். எல்.முருகன் பிரதமருக்கு ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்துவைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலமாக ஐஎன்எக்ஸ் தளத்திற்கு சென்றார். அங்கு பிரதமரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.