என் காச எடுத்து கொடுக்குறது சேவை எப்படி ஆகும்..?சரமாரி கேள்வி..!
பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து நாம் தமிழர் கட்சி சீமான் குறித்து சரமாரி கேள்விகளை எழுப்பினார்.
பொங்கல் விழா
கட்சியின் பெண்கள் பாசறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது, பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அப்போது அவரிடம் பேருந்து போக்குவரத்து போராட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், பிடித்து வைப்பட்டிருந்த பென்ஷன் பணம் எங்கு தான் போக்குவரத்து தொழிலாளர்கள் கேட்கிறார்கள் என்ற அவர், பொங்கல் நேரம் என்றால் அவர்கள் தங்களது சம்பளத்தை இழந்து தான் கேட்கிறார்கள் என்று கூறினார்.
இது எப்படி...?
மழை நேரத்தில் சரியில்லாத பேருந்துகள், போராட்டம் நடத்தும் போக்குவரத்து தொழிலாளர்கள் இருக்கும் நிலையில், ஆனால் 400 கோடியில் பேருந்து நிலையம் என்றெல்லாம் கேள்விகளை எழுப்பினார். தொடர்ந்து அவர்கள் ஜெயலலிதா, எடப்பாடி என்றும் தற்போது இவர்களது காலத்திலும் போராடி வருகின்றனர் என்று கூறினார்.
ஆட்சியாளர்கள் தொடர்ந்து ஒருவர் மீது மற்றொரு குற்றம்சாட்டியே தான் வருகிறார்கள் என்று குற்றம்சாட்டிய சீமான், அவர்களுக்காக யார் வேண்டுமானாலும் என்று சுட்டிக்காட்டி போராடும் தொழிலாளர்களுக்கு பொங்கல் இல்லையா என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து பேசிய அவர், இங்கு ஏமாளிகள் இருப்பதால் தான், அதானி பாராட்டு தெரிவிக்கிறார் என்று கூறி, இந்த முதலீட்டளார்கள் மாநாட்டிற்கு மட்டும் 100 கோடி செலவாகிருப்பதாக கூறினார்.
அதனையடுத்து அரசு அளிக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பு குறித்து பேசிய அவர், எங்கள் காசை எடுத்து எங்களுக்கே கொடுப்பதை எவ்வாறு சேவை என கூறிக்கொள்ள முடியும் என்றும் மீண்டும் ஒரு முறை பொங்கல் நல்வாழ்த்து தெரிவித்து சென்றார்.