எங்க அப்பன் வீட்டு சொத்து தான் - உதயநிதிக்கு சப்போர்ட் பண்ண கரு.பழனியப்பன்..!
கலைஞர் 100 நிகழ்ச்சியில் பேசிய கரு.பழனியப்பன் விஜயகாந்த்திற்கு தமிழ்நாடு அரசும் காட்டிய பண்பு நாகரிகத்தின் உச்சம் என பாராட்டியுள்ளார்.
கரு பழனியப்பன் பேச்சு
திரைத்துறை சார்பில் நடைபெற்ற கலைஞர் 100 விழாவில் திரை துறையை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், இயக்குனரும் நடிகருமான கரு பழனியப்பன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், சமீபத்தில் மறைந்து போன விஜயகாந்த்திற்கு தமிழ்நாடு முதல்வரும், தமிழ்நாடு அரசும் காட்டிய பண்பு நாகரிகத்தின் உச்சம் என பாராட்டி, அதை தாண்டுவதற்கு இன்னொரு இடம் கிடையாது என்றும் ஒரு முதல்வர் பதவியில் இருப்பவர் அவருக்கு இருமுறை சென்று மரியாதை செலுத்துவதும் , ஒரு அமைச்சராக இருக்கும் உதயநிதி மூன்று முறை சென்று பார்ப்பதும் நாகரிக அரசியல் என பாராட்டினார்.
அப்பன் வீட்டு காசா
தொடர்ந்து பேசிய அவர், இது அப்பன் வீட்டு காசா என்று கேட்டால் ஆமாம் என்று சொல்லணும் என அதிரடியாக கருத்து தெரிவித்து,
ஆமாம் அப்பன் வீட்டு காசு தான் என்று கூறி ஏன்னா எங்களுக்கு அப்பன் பெரியார் என்றும் பெரியார் வீடு தமிழ்நாடு என்றார்.
தமிழ்நாடு காசு இது அதனால் எங்கள் அப்பன் வீட்டு காசு தான் என விளக்கமளித்தார்.