பொங்கல் பரிசு தொகுப்பு - துவங்கி வைத்தார் முதல்வர் முக ஸ்டாலின்..!
இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி இன்று துவங்கியுள்ளது.
பொங்கல் பரிசு
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக வினியோகம் செய்யப்படும்.
அதன்படி, இந்தாண்டிற்கான பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு பொங்கல் பரிசாக வழங்கப்படும்.
துவங்கி வைத்த முதல்வர்
மேலும், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைதாரகளுக்கு ரூ1000 ரொக்கம் இல்லை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த அறிவிப்பை வாபஸ் பெற்ற அரசு அனைத்து ரேஷன் அட்டைக்காரர்களுக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்தது.
அதனை தொடர்ந்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின், ஆழ்வார்பேட்டையில் இன்று பரிசு தொகுப்பை வழங்கி திட்டத்தை துவங்கி வைத்தார்.