போக்குவரத்து Strike - நீங்க பண்ணது தான் - உங்களுக்கு வருது - சீமான்..!!
2017-இல் எதிர்க்கட்சியாக இருந்து போது என்ன செய்தீர்களோ அது தான் திரும்பியுள்ளது என சீமான் அரசை சாடியுள்ளார்.
போராட்டம்
இன்று 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றார். அதன் காரணமாக பல இடங்களில் பேருந்துகள் இல்லாமல் தவித்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
ஆனாலும், அரசும் தற்காலிக தொழிலாளிகளை வைத்து பேருந்துகளை இயக்கி மக்களுக்கு ஏற்படும் இன்னலை குறைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
நீங்க பண்ணது தான்...
இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கடந்த 2017ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சிக் காலத்தில், நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தையொட்டி, நீங்கள் எந்தக் கருத்தை வலியுறுத்தி அப்போதைய முதல்வருக்குக் கோரிக்கை வைத்தீர்களோ,
கடந்த 2017ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சிக் காலத்தில், நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தையொட்டி, நீங்கள் எந்தக் கருத்தை வலியுறுத்தி அப்போதைய முதல்வருக்குக் கோரிக்கை வைத்தீர்களோ, அதே போன்றதொரு சூழலில், அதே கருத்தை, தற்போதைய… https://t.co/NxzvCq3TQK
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) January 9, 2024
அதே போன்றதொரு சூழலில், அதே கருத்தை, தற்போதைய முதல்வராக உள்ள தங்களுக்கு நினைவுப் படுத்த வழிமொழிகிறேன்.