தற்காலிக ஓட்டுனரால் ஏற்பட்ட பயங்கர விபத்து - கடை - கார்களில் மோதி விபத்து
இன்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலை நிறுத்தம்
6 அம்ச கோரிக்கையை முன்வைத்து தமிழக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனாலும், அரசு தரப்பில் மக்கள் அவதியை தடுக்க பல முன்னேடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்காலிக ஓட்டுனர்கள், நடத்துனர்கள் ஆகியோரை வைத்து அரசு பேருந்துகளை ஆங்காங்கே இயக்கி வருகின்றது.
விபத்து
இதற்கிடையில் தான், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து கார் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அதே போல, கன்னியாகுமரி ஆரல்வாய்மொழியில் தற்காலிக ஓட்டுநர் ஓட்டிய பேருந்து கடை ஒன்றின் முகப்பில் மோதியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.