அவங்க தான் தவிக்குறாங்க...தொழிலாளர்கள் பணிக்கு வந்தாச்சு - அமைச்சர் சிவசங்கர்

Tamil nadu Chennai S. S. Sivasankar
By Karthick Jan 09, 2024 06:17 AM GMT
Report

 இன்று போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில், அரசு பல முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றது.

வேலை நிறுத்தம்

6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்தனர். முன்னதாக நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாத காரணத்தால், இன்று முதல் வேலை நிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து கழகங்கள் அறிவித்தன.

ss-sivasankar-in-transport-bus-strike-in-chennai

இந்நிலையில், தமிழகத்தின் பல இடங்களிலும் போலீசார் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. பேருந்துகள் குறைக்கப்பட்டு, போராட்டம் தீவிரமடைந்து வருவதாக சங்கத்தினர் தெரிவித்து வரும் சூழலில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சென்னை கோயம்பேட்டில் ஆய்வு மேற்கொண்டார்.

அவுங்க தான்...

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது, அனைத்து தொழிலாளர்களும் கூடுதல் சம்பள உயர்வு பெற்று மகிழ்ச்சியோடு உள்ளனர் என குறிப்பிட்டு, நிதிச்சுமை காரணமாகவே கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியவில்லை என விளக்கமளித்தார்.

ss-sivasankar-in-transport-bus-strike-in-chennai

அரசியல் காரணங்களுக்காக போராட்டங்கள் நடத்தி மக்களை திசை திருப்பப் பார்க்கின்றனர் என எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சாட்டி அவர், மீதமுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற அவகாசம் கேட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அகவிலைப்படி உயர்வை வழங்குவதற்கு கால அவகாசம் தான் கேட்கிறோம் என்ற அமைச்சர் சிவசங்கர், போராடுவது உரிமை என்று குறிப்பிட்டு ஆனால் மக்களுக்கு இடையூறு இன்றி போராட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ss-sivasankar-in-transport-bus-strike-in-chennai

தொடர்ந்து பேசிய அவர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க கூட்டமைபின் தொழிலாளர்களே பணிக்கு வந்து பேருந்துகளை இயக்கி வருகின்றனர் என்று கூறி, தங்கள் அமைப்பு பலத்தை காட்டுவதற்காக போராட்டதை அறிவித்த கூட்டமைப்பின் தலைவர்கள் தான் தற்போது அதனை கைவிட முடியாமல் தவிக்கின்றனர் என்றும் கூறினார்.