அதிரடி ஆக்ஷனில் இறங்கிய தலைமை ஆசிரியர் - கத்தரிக்கோலுடன் பள்ளி வாசலில்..
மாணவர்களை நல்வழிப்படுத்த அதிரடியாக கத்திரிக்கோல், தேங்காய் எண்ணையுடன் அரசு பள்ளி தலைமையாசிரியர் தானே களத்தில் இறங்கியுள்ளார்.
தலைமை ஆசிரியர்
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் வள்ளலார் அரசு பள்ளியில் சுமார் 1126-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு 6 மாதத்துக்கு முன்பு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றவர் ஜவியர் சந்திரகுமார்.
இங்கு பயிலும் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கட்டுப்படாமல் மோசமான சிகை அலங்காரம் செய்து வருவது, கையில் வண்ண கயிறுகள் கட்டுதல், மாணவிகள் தலைமுழுதும் பூ வைத்தும் மற்றும் முக அலங்காரம் செய்து வருவதும் என காணப்பட்டனர்.
நல்வழிப்படுத்த
இவற்றை தடுக்க முடியவில்லை என பெற்றோர்கள் கூறினர். இதனால் அதிரடியாக களத்தில் இறங்கினார் தலைமை அசிரியர்.
அவரே கையில் கத்தரிக்கோல் மற்றும் எண்ணெயுடன் பள்ளியின் நுழைவு வாயிலில் நின்று கொண்டு வரும் மாணவர்களை தடுத்து நிறுத்தி தலையில் எண்ணை தேய்ப்பது, முடி வெட்டுவது மற்றும் கையில் கயிறு இருந்தால் அவற்றை அறுத்து எறிவது என செயல்பட்டார்.
பெற்றோர்கள் வரவேற்பு
மாணவிகள் அதிக பூ வைத்துக்கொள்ளக்கூடாது. அலங்காரம் செய்து வரக்கூடாது அனைவரும் சமமாக உடை அணிந்து வர வேண்டும் என வலியுறுத்தினார். தலைமையாசிரியரின் இந்த செயலை பெற்றோர்கள் வரவேற்றனர்.
ஆனால், சமூகவலைதளத்தில் பலர், மாணவ, மாணவிகளின் தனிப்பட்ட விருப்பத்தில் தலையீடுவதாக கூறி கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வலியில்லா பிரசவம் - ப்ரத்யேக ஏற்பாடு.. சிரிப்பு வாயுவை பயன்படுத்தும் அரசு மருத்துவமனை!