வலியில்லா பிரசவம் - ப்ரத்யேக ஏற்பாடு.. சிரிப்பு வாயுவை பயன்படுத்தும் அரசு மருத்துவமனை!

Pregnancy India Hyderabad
By Sumathi Jun 25, 2022 07:24 AM GMT
Report

கர்ப்பிணிப் பெண்கள் வழக்கமாக ஏற்படும் அதீத வலியின்றி, இயற்கையான முறையில் பிரசவம் பார்க்க அரசு மருத்துவமனை ஒன்றில் பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 கர்ப்பிணி

ஐதராபாத்தில் இருக்கும் மாவட்ட அரசு மருத்துவமனையான King Koti, கர்ப்பிணி பெண்களின் பிரசவத்திற்காக ஒரு புதிய வழிமுறையை பயன்படுத்துகிறது.

வலியில்லா பிரசவம் - ப்ரத்யேக ஏற்பாடு.. சிரிப்பு வாயுவை பயன்படுத்தும் அரசு மருத்துவமனை! | Hyderabad Laughing Gas To Reduce Labour Pain

பிரசவத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் வலி மற்றும் துன்பத்தை குறைக்கும் வகையில், King Koti மாவட்ட மருத்துவமனை, குழந்தைகளை பிரசவிக்கும் போது கர்ப்பிணிகளுக்கு சிரிப்பு வாயு அல்லது

 புதிய வழிமுறை

என்டோனாக்ஸ் (நைட்ரஸ் ஆக்சைடு மற்றும் ஆக்ஸிஜன் கலந்த வாயு) பயன்படுத்த தொடங்கியுள்ளது. மாவட்ட மருத்துவமனை இதற்காக ஒரு டிவைஸை பயன்படுத்துகிறது.

வலியில்லா பிரசவம் - ப்ரத்யேக ஏற்பாடு.. சிரிப்பு வாயுவை பயன்படுத்தும் அரசு மருத்துவமனை! | Hyderabad Laughing Gas To Reduce Labour Pain

இதில் ஆக்சிஜன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு கலந்த வாயுவான சிரிக்கும் வாயு கலவையை கொடுப்பதன் மூலம் பெண்களின் பிரசவ வலியை மருத்துவ நிபுணர்கள் குறைக்கிறார்கள்.

 பிரசவ வலி

இயற்கையான பிரசவத்திற்கு பெண்களை ஊக்குவிக்கும் சுகாதாரத் துறையின் பெரிய நோக்கத்திற்கான ஒரு முக்கியபடி இது என்று மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டு உள்ளது.

கடும் பிரசவ வலியால் அவதிப்படும் கர்ப்பிணிகளுக்கு இனி ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என மாவட்ட மருத்துவமனையின் மகளிர் மருத்துவ பிரிவு தலைவர் டாக்டர் ஜலஜா வெரோனிகா தெரிவித்து உள்ளார்.

சிரிப்பு வாயு

மேலும் இந்த கருவியின் உதவியுடன், பிரசவ வலியை எதிர்கொள்ளும் பெண்கள் ஆக்ஸிஜன் மற்றும் சிரிக்கும் வாயு கலவையை சுவாசிப்பதன் மூலம் தங்கள் வலியை குறைத்து கொள்ள முடியும்.

நோயாளி ஆழமாக சுவாசிக்கும்போது, வாயு அவர்களது உடலுக்குள் சென்று வலியைக் குறைக்க உதவுகிறது. சிசேரியன் பிரசவங்களை குறைக்கவும், சுக பிரசவங்களை அதிகரிக்கவும்

வலி நிவாரணி

இந்த என்டோனாக்ஸ் தொழில்நுட்பத்தை அரசு மருத்துவமனைகளில் வழங்க அம்மாநில சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக தற்போது இந்த டெக்னலாஜி மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள ஒரு சில பெரிய மருத்துவமனைகளில் மட்டுமே இந்த தொழில்நுட்பம் இருப்பதாக மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர். கர்ப்பிணிகள் பிரசவ வலியின் போது மாஸ்க் அல்லது மவுத்பீஸ் மூலம் இந்த வாயுவை உள்ளிழுக்க சொல்கிறோம்.

உள்ளிழுத்த 15 முதல் 20 வினாடிகளில் இது செயல்படத் தொடங்குகிறது. ஒன்று முதல் இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் வரை வலியை நீக்குகிறது. மீண்டும் வலி வரும் போது ஒரு கர்ப்பிணிப் பெண் மீண்டும் வாயுவை சுவாசித்தால், மேலும் 5 நிமிடங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

இவை மயக்க மருந்தாக செயல்படாமல், வலி நிவாரணியாக செயல்படுகின்றன. கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து தற்போது வரை 13 பெண்களுக்கு இந்த டெக்னலாஜி பயனப்டுத்தப்பட்டு உள்ளதாக மருத்துவர் ஜலஜா வெரோனிகா கூறியுள்ளார்.

வைரமுத்து போன்றவங்க உங்க வீட்டு கதவ தட்டட்டும்.. கமெண்ட்சால் கடுப்பான சின்மயி!