வைரமுத்து போன்றவங்க உங்க வீட்டு கதவ தட்டட்டும்.. கமெண்ட்சால் கடுப்பான சின்மயி!
வைரமுத்துவோடு ஒப்பிட்டு தன் குழந்தைக்கு வாழ்த்து சொன்ன நெட்டிசன்களை பார்த்து கடுப்பான சின்மயி, அவருக்கு தக்க பதிலடியும் கொடுத்துள்ளார்.
சின்மயி
பாடகி சின்மயி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கவிஞர் வைரமுத்து மீது மீடூ புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இன்றளவும் வைரமுத்து மீது குற்றம்சாட்டி வரும் அவர்,
சமூக வலைதளம் வாயிலாக பெண்களை யாராவது இழிவுபடுத்தினாலோ, அல்லது அத்துமீறி கமெண்ட் செய்தாலோ போல்டாக பதிலடி கொடுத்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சின்மயிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
இரட்டைக் குழந்தை
இதையடுத்து அவருக்கு ஒருபுறம் வாழ்த்துக்கள் குவிந்தாலும், மறுபுறம் அவரது குழந்தைகளை கேலி செய்தும் ஒரு சிலர் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த 4 நாட்களாக நான் பாத்த பல கமென்ட்ஸ் இப்படித்தான்.
— Chinmayi Sripaada (@Chinmayi) June 24, 2022
இந்த பொறுக்கிதனமான கலாசாரம் முற்போக்கு பெண்ணியம்னு பேசிற இந்த கேவலமான மக்கள்ட மட்டும்தான்.
வைரமுத்து போன்றவங்க உங்க வீட்டு கதவ தட்டட்டும். அப்ப புரியுமோ என்னவோ. https://t.co/vqDj1MmH2F
இதனால் கோபமடைந்த சின்மயி இதற்காகத்தான் கர்ப்பமாக இருப்பதை சோசியல் மீடியாவில் தெரிவிக்காமல் இருந்தேன் என கூறி இருந்தார். சிலர் வைரமுத்துவோடு ஒப்பிட்டு பதிவிட்டு வந்தனர்.
வைரம் முத்து
அந்த வகையில் நெட்டிசன் ஒருவர் வைரம் முத்து போல இன்று போல் என்றும் புகழோடு வாழ்க வளமுடன் என பதிவிட்டு இருந்தார். இதைப் பார்த்து கடுப்பான சின்மயி, அவருக்கு தக்க பதிலடியும் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது,
நெத்தியடி பதில்
கடந்த 4 நாட்களாக நான் பாத்த பல கமென்ட்ஸ் இப்படித்தான். இந்த பொறுக்கிதனமான கலாசாரம் முற்போக்கு பெண்ணியம்னு பேசிற இந்த கேவலமான மக்கள்ட மட்டும்தான். வைரமுத்து போன்றவங்க உங்க வீட்டு கதவ தட்டட்டும். அப்ப புரியுமோ என்னவோ என நெத்தியடி பதில் கொடுத்துள்ளார்.
முன்ன குண்டு...இப்ப கிழவி... அம்மாவுடன் கம்பேர் பண்ணி பேசுனாங்க - குஷ்பு மகள் உருக்கம்!

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

Singappenne: ஆனந்திக்காக துணிந்த அன்பு.. விழிபிதுங்கி நிற்கும் கருணாகரன்- சூடுபிடிக்கும் கதைக்களம் Manithan
