குழந்தையை வைரமுத்துவோடு ஒப்பிட்ட நெட்டிசன்... - வெச்சு விளாசிய சின்மயி - ஷாக்கான ரசிகர்கள்

Twitter Vairamuthu Chinmayi
5 நாட்கள் முன்

பிரபல பாடகி சின்மயி

பிரபல பின்னணி பாடகி சின்மயி, ஏ. ஆர். ரகுமான் இசையில் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் இடம்பெற்ற ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என்ற பாடல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். பல படங்களில் இவர் கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்.

திருமணம்

சின்மயி கடந்த 2014ம் ஆண்டு நடிகர் ராகுல் ரவீந்திரன் என்பவரை திருமணம் செய்தார்.

சர்ச்சை

கடந்த சில ஆண்டுகளாகவே சின்மயியை சுற்றி சர்ச்சையான கருத்துக்களும், விமர்சனங்களும் வலம் வர தொடங்கியது. கவிஞர் வைரமுத்து மீது அவர் கொடுத்த மீடூ புகார் ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சியடைய செய்தது. அன்றிலிருந்து இன்றுவரை சின்மயி தொடர்ந்து அதுகுறித்து சமூகவலைதளங்களில் பேசி வருகிறார்.


இரட்டைக் குழந்தை

தற்போது, பாடகி சின்மயி - ராகுல் ரவீந்திரன் தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இதை தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ள தம்பதி, டிரிப்தா மற்றும் ஷர்வாஸ் என குழந்தைகளின் பெயரை குறிப்பிட்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவரது ரசிகர்கள் சின்மயிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

குழந்தையை வைரமுத்துவோடு ஒப்பிட்ட நெட்டிசன்... - வெச்சு விளாசிய சின்மயி - ஷாக்கான ரசிகர்கள் | Chinmayi Twit

வைரமுத்துவுடன் ஒப்பிட்ட நெட்டிசன்

இந்நிலையில், நெட்டிசன் ஒருவர் “வைரம் மற்றும் முத்து சொன்னது அக்கா வைரமுத்துனு நினைச்சிட்டாங்க போல, எப்ப பாரு அதே நெனப்பு” என்று பதிவிட்டிருந்தார்.

சின்மயி பதிலடி

இந்த கமெண்ட்டைப் பார்த்த சின்மயி மிகவும் கோபமடைந்தார். இது குறித்து அவரது தனது டுவிட்டர் பக்கத்தில் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அந்த பதிவில், “அவர போலவே உங்க வீட்ல பிள்ளைகள் பிறக்கட்டும். அவர் நினைப்பாவே இருக்க உங்களுக்கு என் வாழ்த்துக்கள்” என நெத்தியடி கொடுத்துள்ளார். தற்போது இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

குழந்தையை வைரமுத்துவோடு ஒப்பிட்ட நெட்டிசன்... - வெச்சு விளாசிய சின்மயி - ஷாக்கான ரசிகர்கள் | Chinmayi Twitஇயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.